ECONOMY

மீண்டும் பள்ளிக்குச் செல்வோம் திட்டத்தின் கீழ் சுங்கை ராமால் தொகுதியிலுள்ள 350 மாணவர்களுக்கு உதவி

உலு லங்காட், மார்ச் 4- சுங்கை ராமால் தொகுதியைச் சேர்ந்த 350 மாணவர்கள் மீண்டும் பள்ளிக்குச் செல்வோம் திட்டத்தின் கீழ் உதவிகளைப் பெறுகின்றனர்.

இம்மாதம் 12ஆம் தேதிக்கு முன்பாக அதாவது பள்ளித் தவணை தொடங்குவதற்கு முன்னர் இந்த உதவி சம்பந்தப்பட்ட மாணவர்களிடம் சேர்ப்பிக்கப்படும் என்று தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மஸ்வான் ஜோஹார்  கூறினார்.

இத்திட்டத்தின் கீழ் புத்தகப் பை, எழுதுபொருள்கள், புத்தகங்கள் உள்ளிட்ட பொருள்களை வழங்குவதற்கு ஒவ்வொரு மாணவருக்கும் தலா 100 வெள்ளி ஒதுக்கப்பட்டுள்ளது. மொத்தம் 40,000 வெள்ளி நிதி ஒதுக்கீட்டில் இந்த திட்டம் மேற்கொள்ளப்படுகிறது என்று அவர் தெரிவித்தார்.

இது சுங்கை ராமால் தொகுதியின் வருடாந்திர நிகழ்வாகும். இந்த திட்டத்திற்கு கிடைத்துள்ள விண்ணப்பங்கள் பிரமிக்கத் தக்க வகையில் உள்ளன. ஆகவே, இத்திட்டத்தை இவ்வாண்டிலும் தொடர திட்டமிட்டுள்ளோம் என்று அவர் குறிப்பிட்டார்.

பண்டார் பாரு பாங்கி, பெரிய மார்க்கெட்டுக்கு மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி இன்று மேற்கொண்ட வருகையில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்


Pengarang :