ALAM SEKITAR & CUACANATIONAL

ஜோகூர் வெள்ளம்- 42,638 பேர் துயர் துடைப்பு மையங்களில் அடைக்கலம்

கோலாலம்பூர், மார்ச் 12- வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நான்கு மாநிலங்களில் இன்று காலை நிலவரப்படி 43,136 பேர் வெள்ள துயர் துடைப்பு மையங்களில் தங்கியுள்ளனர்.

வெள்ளத்தால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட ஜோகூர் மாநிலத்தில் இன்று காலை 8.00 மணி வரை 42,638 பேர் நிவாரண மையங்களில் தங்கியுள்ளனர். நேற்றிரவு இந்த எணிக்கை 42,770 ஆக இருந்தது.

வெள்ள பாதிப்பை எதிர்நோக்கியுள்ள இந்த மாநிலத்தின் நான்கு மாவட்டங்களில் 12,049 குடும்பங்கள் 155 துயர் துடைப்பு மையங்களில் அடைக்கலம் நாடியுள்ளதாக மாநில வெள்ளப் பேரிடர் மேலாண்மைச் செயல்குழு அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.

மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட பத்து பஹாட் மாவட்டத்தில் 39,870  பேரும் மூவாரில் 1,457 பேரும் சிகாமாட்டில் 362 பேரும் நிவாரண மையங்களில அடைக்கலம் நாடியுள்ளனர் என்று அது தெரிவித்தது.

மலாக்கா மாநிலத்தின் ஜாசின் மாவட்டத்தில் இன்று காலை நிலவரப்படி 55 குடும்பங்களைச் சேர்ந்த 238 பேர் வெள்ள நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நேற்றிரவு இந்த எண்ணிக்கை 61 குடும்பங்களைச் சேர்ந்த 259 பேராக இருந்தது.

பகாங் மாநிலத்தின் ரொம்பின் மாவட்டத்தில் உள்ள இரு துயர் துடைப்பு மையங்களில் 169 போர் தங்க வைக்கப்பட்டுள்ளதாக  மாநில சமூக நலத்துறையின் இன்போ பெஞ்சானா அகப்பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சரவா மாநிலத்தைப் பொறுத்த வரை கூச்சிங் நகரில் செயல்படும் இரு துயர் துடைப்பு மையங்களில் 18 குடும்பங்களைச் சேர்ந்த 18 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 


Pengarang :