ECONOMYPENDIDIKAN

புன்னகை பூத்த முகப் பொலிவுடன்  வாகீசர் தமிழ்ப்பள்ளியில் 100  புதிய மாணவர்கள்  சேர்ந்தனர்.

கோலா சிலாங்கூர்  மார்ச் 20- நாடு தழுவிய நிலையில் இன்று பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன  அந்த வகையில் கோல சிலாங்கூர்  வட்டாரத்தில் அதிக மாணவர்கள் படிக்கும் தமிழ்ப் பள்ளியாக  வாகீசர் தமிழ்ப்பள்ளி இன்னும்  சிறப்பாகப் பல  புதிய மாணவர்களுடன்  தொடங்கியது.

அனுபவமிக்க  பல ஆசிரியர்களைக் கொண்ட இப் பள்ளி  ” தமிழ்ப்பள்ளி ” என்ற சொல்லை மையமாகக்  கொண்டு வளர்ந்து  வருகிறது. அந்த வகையில்  ஆண்டின்  தொடக்க  நாளான  இன்று  முதலாம் ஆண்டில்  காலடி  எடுத்து வைக்கும்  மாணவர்களின் எண்ணிக்கையைப் பார்த்தோம் என்றால்  இவ்வாண்டு சென்ற ஆண்டை காட்டிலும் சிறப்பாக உள்ளது.

இந்த ஆண்டு முதலாம் வகுப்பில் இணைவதற்கு 50 – மாணவர்களும்,  பாலர் பள்ளி வகுப்பில் 50 – மாணவர்களும் இணைந்தது பெரும் மகிழ்ச்சியாக உள்ளது என்று பள்ளியின் தலைமை ஆசிரியை திருமதி : பெண்ணரசி தனபால் தனது துவக்க உரையில் கூறினார்.

அதே சமயம் ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்தில் பள்ளியில்  இணைந்த அனைத்து  மாணவர்களுக்கும்  கால அட்டவணைப்படி ஒன்றன் பின் ஒன்றாகப் பாடங்கள் போதிக்கப்படும்.

ஆனால் இந்த ஆண்டின்  தொடக்கத்தில் பல நடவடிக்கைகள் மாணவர்களுக்குக் கற்றுத் தரப்படும் என்றும் கூறினார். அதே சமயத்தில் பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளை சரியான நேரத்தில் அழைத்து வந்து பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளது மகிழ்ச்சியாக இருப்பதாகவும் தமதுரையில் கூறினார் வாகீசர் தமிழ் பள்ளியின் தலைமை ஆசிரியை திருமதி :பெண்ணரசி தனபால் அவர்கள்


Pengarang :