MEDIA STATEMENTPENDIDIKAN

சுங்கை ரெங்கம் தமிழ்ப்பள்ளியில் 115 மாணவர்கள் முதலாம் வகுப்பில் சேர்ந்தனர்

ஷா ஆம், மார்ச் 20- இங்குள்ள சுங்கை ரெங்கம் தமிழ்ப்பள்ளியில் 2023/2024 கல்வியாண்டில் 115 மாணவர்கள் முதலாம் வகுப்பில் சேர்ந்துள்ளனர். புதிதாக சேர்ந்த மாணவர்களுடன் சேர்த்து இப்பள்ளியில் பயிலும் மொத்த மாணவர்களின் எண்ணிக்கை 725ஆகப் பதிவாகியுள்ளது.

முதலாம் ஆண்டு மாணவர்களுக்காக நான்கு வகுப்பறைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பள்ளியின் வாரியத் தலைவர் எம்.சுகுமாறன் கூறினார்.

புதிதாக மேலும் பலர் பதிவு  செய்வதற்குரிய வாய்ப்பு உள்ளதால் இப்பள்ளியில் இன்னும் சில தினங்களில் மாணவர்கள் எண்ணிக்கை உயர்வு காண்வதற்குரிய வாய்ப்பு உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இப்பள்ளியில் செயல்படும் பாலர் பள்ளியில் 100 மாணவர்கள் இதுவரை பதிவு செய்துள்ள வேளையில் மேலும் 28 மாணவர்கள் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்று அவர் சொன்னார்.

பாலர் பள்ளியில் உள்ள நான்கு வகுப்புகளில் தலா 25 மாணவர்கள் வீதம் 100 மாணவர்கள் மட்டுமே பயில்வதற்குரிய வசதி உள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதனிடையே, பெட்டாலிங் பெர்டானா மாவட்டத்தில்  உள்ள தமிழ்ப்பள்ளிகளில் முதலாம் ஆண்டில் சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கையில் அதிகம் மாற்றம் காணப்படவில்லை

சீபீல்டு பள்ளியில் 14 மாணவர்களும் துன் சம்பந்தன் பள்ளியில் 105 மாணவர்களும் கிளன்மேரி பள்ளியில் 13 மாணவர்களும் ஈபோர் பள்ளியில் 8 மாணவர்களும் சுங்கை ரெங்கம் பள்ளியில் 115 மாணவர்களும் மிட்லண்ட்ஸ் பள்ளியில் 14 மாணவர்களும் ராசாக் பள்ளியில் 25 மாணவர்களும்  கின்ராரா பள்ளியில் 116 மாணவர்களும் செர்டாங் பள்ளியில் 95 மாணவர்களும் பூச்சோங் பள்ளியில் 115 மாணவர்களும் காசல்பீல்டு பள்ளியில் 114 மாணவர்களும் ஹைக்கோம் பள்ளியில் 19 மாணவர்களும் சேர்ந்துள்ளனர்.


Pengarang :