ECONOMYNATIONAL

ஐடில்பித்ரி பண்டிகை வரை போதுமான கோழி மற்றும் முட்டைகள் கிடைக்க  அமைச்சு உத்தரவாதம்

புத்ராஜெயா, மார்ச் 31:  ரம்லான் மாதம் முழுவதும்  ஐடில்பித்ரி பண்டிகை வரை   கோழி மற்றும் கோழி முட்டைகள் போதுமானதாக இருக்கும் என்று உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவு அமைச்சகம் (KPDN) தெரிவித்துள்ளது.

அவ்வமைச்சு (KPDN) இன்று வெளியிட்ட அறிக்கையில், கோழி மற்றும் கோழி முட்டை உற்பத்தியாளர்கள்,மற்றும் கோழி வளர்ப்பாளர் சங்கங்களின் கூட்டமைப்பு (FLFAM) அந்த  உறுதியை  அளித்துள்ளதாக கூறினார்.

உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவு அமைச்சகம் (KPDN) நிதி அமைச்சகம், வேளாண்மை மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சகம், கால்நடை மருத்துவ சேவைகள் துறை, தனிமைப்படுத்தல் மற்றும் ஆய்வு சேவைகள் மலேசியா மற்றும் FLFAM முடன் தொடர்புள்ள இலாக்காக்கள் , உற்பத்தியாளர்கள் கோழியின் வினிநோகத்திலும் மற்றும் விலையை உறுதி செய்வதற்கான பணியில் ஈடுபட்டுள்ளது. அக்கூட்டு ஒத்துழைப்பின் வழி கோழி மற்றும் கோழி முட்டைகளின்  தேவைகளை முழுமையாக சமாளிக்க முடியும், என்றார்.

“நாட்டில் கோழி மற்றும் கோழி முட்டைகள் விநியோகத்தில் ஏதேனும் இடையூறு ஏற்பட்டால், அதைச் சமாளிப்பதற்கு அமைச்சகத்துடன் இணைந்து செயல் படுவதாக  உற்பத்தியாளர்கள் தங்கள் உறுதிப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளனர்.

உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவு அமைச்சகம் (KPDN) அறிக்கையின்படி, 5 பிப்ரவரி 2022 காலப்பகுதியில் நேற்று வரை கோழி மற்றும் கோழி முட்டைகளின் அதிகபட்ச விலை நிர்ணயத்தை அமல்படுத்துவது தொடர்பான அமலாக்க புள்ளிவிவரங்களின் அடிப்படையில், அமைச்சகம் நாடு முழுவதும் 183,047 சோதனைகளை மேற்கொண்டதுடன் RM 482  மொத்த அபராத மதிப்பு கொண்ட 2,711 குற்றப்பதிவுகளை  தயாரித்துள்ளது.

கண்டறியப்பட்ட குற்றங்களில் கட்டுப்பாட்டு விலைக்கு மேல் விற்பனை செய்தல், விலைக் குறியிடலுக்கு இணங்கத் தவறியது மற்றும் பிற குற்றங்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

– பெர்னாமா


Pengarang :