KOTA BHARU , 8 April — Ketua Pengarah Jabatan Pengangkutan Jalan Datuk Zailani Hashim menunjukkan aplikasi MyJPJ pada sidang media sempena Majlis Berbuka Puasa JPJ Negeri Kelantan di Jabatan Pengangkutan Jalan Negeri Kelantan Panji hari ini. — fotoBERNAMA (2023) HAK CIPTA TERPELIHARA
ANTARABANGSAECONOMY

மைஜேபிஜே செயலியை 29.7 லட்சம் வாகனமோட்டிகள் பதிவிறக்கம் செய்துள்ளனர்

கோத்தா பாரு, ஏப் 9- இவ்வாண்டு பிப்ரவரி 10ஆம் தேதி மைஜேபிஜே செயலி அறிமுகப்படுத்தப் பட்டதிலிருந்து 29  லட்சத்து 71 ஆயிரம் வாகனமோட்டிகள்  அதனைப் பதிவிறக்கம் செய்துள்ளனர் என்று சாலைப் போக்குவரத்துத் துறை தலைமை (ஜேபிஜே) இயக்குநர்  டத்தோ ஜைலானி ஹாஷிம் தெரிவித்தார்.

அந்த செயலியை வாகனமோட்டிகள் பதிவிறக்கம் செய்து பயன்படுத்துவதை  ஜேபிஜே தொடர்ந்து  ஊக்குவித்து வருவதாக அவர் கூறினார். இதுவரை இந்நடவடிக்கை சீராக நடந்து கொண்டிருக்கிறது, பணிகளை எளிதாக்கு வதற்கு ஏதுவாக  இந்த செயலியைப் பதிவிறக்கம் செய்யும்படி வாகனமோட்டிகளை கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் சொன்னார்.
 

இப்போது நாங்கள் மைஜேபிஜே செயலி  பற்றி பொதுமக்கள்  தெரிந்துகொள்ள  தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். மேலும், லைசென்ஸ்களை புதுப்பிப்பது மற்றும் காட்சிப்படுத்தும் பணிக்காக இந்த செயலியை இவ்வாண்டு
மத்தியில் மேம்படுத்தப் படுத்த இருக்கிறோம்  என்று அவர் கூறினார்.

நேற்றிரவு கிளந்தான் ஜேபிஜே ஏற்பாட்டில் நடைபெற்ற  40 ஆதரவற்ற சிறார்களுடன் நோன்பு திறப்பு நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர் சந்திப்பில் அவர் 
இவ்வாறு தெரிவித்தார்.

எந்த ஆலோசகர்களின் உதவியுமின்றி   சாலை போக்குவரத்து   இலாகாவின் சொந்த  தகவல் தொழில்நுட்பக் குழுவால் இந்த இலக்கவியல் மயத் திட்டம்  மேற்கொள்ளப்     பட்டது என்றார் அவர்.

Pengarang :