Pegawai Khas Perhubungan Masyarakat Dato’ Menteri Besar Dr G Gunaraj (tengah) ketika sidang media pelancaran Program Selangor Junior Super Star 2023 di Pusat Pembangunan Komuniti, Taman Sentosa, Klang pada 13 April 2023. Foto AHMAD ZAKKI JILAN/SELANGORKINI
MEDIA STATEMENTSELANGOR

செந்தோசா தொகுதி ஏற்பாட்டில் சிறார்களுக்கான பாடல் திறன் போட்டி- ரொக்கப் பரிசினை வெல்ல வாய்ப்பு

கிள்ளான், ஏப் 14- “சிலாங்கூர் சிறுவர் நட்சத்திரம்“ எனும் பாடல் திறன் போட்டியை செந்தோசா தொகுதி ஏற்பாடு செய்துள்ளது. வயது 9 முதல் 15 வயது வரையிலான சிறார்களை இலக்காக கொண்ட இப்போட்டியில்  நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்று தங்கள் கலைத் திறனை வெளிப்படுத்துவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

இளையோர் மத்தியில் மறைந்துள்ள கலைத் திறனை வெளிப்படுத்துவதையும் அவர்களுக்கு மேடை பயத்தை போக்கி தன்னக்கையையும் தைரியத்தையும் ஊட்டுவதையும் நோக்கமாக கொண்ட இந்த போட்டி இரண்டாவது  முறையாக ஏற்பாடு செய்யப்படுவதாக செந்தோசா தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் கூறினார்.

கடந்த 2021ஆம் ஆண்டு நடத்தப்பட்ட போட்டியில் 114 சிறார்கள் பங்கேற்ற வேளையில் இவ்வாண்டு அதை விட அதிகானோர் பங்கேற்பர் எனத் தாங்கள் எதிர்பார்ப்பதாக இந்திய சமூகத்திற்கு மந்திரி புசாரின் சிறப்பு அதிகாரியுமான அவர் நேற்று இங்கு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில்  சொன்னார்.

இந்த போட்டியில் முதல் பரிசாக 2,000 வெள்ளியும் இரண்டாம் பரிசாக 1,500 வெள்ளியும் மூன்றாம் பரிசாக 1,000 வெள்ளியும் ஆறுதல் பரிசாக 500 வெள்ளியும் வழங்கப்படும்.

இந்த போட்டிக்கான முதல் கட்டத் தேர்வு வரும் ஏப்ரல் 17ஆம் தேதியும் அரையிறுதிச் சுற்று மே 7ஆம் தேதியும் நடைபெறவுள்ள நிலையில் இதன் இறுதிச் சுற்று வரும் மே 28ஆம் தேதி கிள்ளான் டேவான் ஹம்சாவில் பிரமாண்டமான அளவில் நடத்தப்படும் என்றார் அவர்.

இந்த போட்டியின் அரையிறுதிச் சுற்றில் 20 பேரும் இறுதிச் சுற்றுக்கு 10 பேரும் தேர்தெடுக்கப்படுவர் எனக் கூறிய அவர், இறுதிச் சுற்றுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவோரை போட்டிக்கு தயார் படுத்தும் பணியில் சிலாங்கூர் தமிழ் கலைஞர்கள் இயக்கத்தின் சார்பில் ஒவ்வொரு போட்டியாளருக்கும் ஒரு கலைஞர் வழிகாட்டியாக நியமிக்கப்படுவார் என்றார்.

கலைத்துறையில் அனுபவம் வாய்ந்த இந்த வழிகாட்டிகள் சம்பந்தப்பட்ட போட்டியாளர்களுக்கு கலைத் துறை தொடர்பான நுணுக்கங்களை கற்றுத் தந்து போட்டிக்குத் தயார்படுத்துவர் என்றார் அவர்.

இந்தப் போட்டிக்கு இன்று தொடங்கி 10 நாட்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்ப பாரங்களை  https://docs.google.com/forms/d/e/1FAIpQLSckS_dgP3I1Nv5rDx1Dvyo0KRFnhyOHmfHKGDzsjbU_SI6tpg/viewform என்ற இணைப்பின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம்.


Pengarang :