MEDIA STATEMENTNATIONAL

நோன்புப் பெருநாளின் போது 80 விழுக்காடு தீயணைப்பு வீரர்களின் விடுமுறை முடக்கம்.

கோலாலம்பூர், பிப் 15- நோன்புப் பெருநாள் சமயத்தில் ஏற்படக்கூடிய அசம்பாவிதங்களை எதிர் கொள்வதற்கு ஏதுவாக மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை 80 விழுக்காடு அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்களின் விடுமுறையை முடக்கியுள்ளது.

இன்று தொடங்கி வரும் ஏப்ரல் 30ஆம் தேதி வரை 10,174 தீயணைப்பாளர்களின் விடுமுறை முடக்கப்படுவதாக தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் தலைமை இயக்குநர் டத்தோ அப்துல் வஹாப் மாட் யாசின் கூறினார்.

பெருநாள் காலத்தில் தீ சம்பவங்கள் நிகழ்வதை தடுப்பதற்காக குடியிருப்பு பகுதிகள் மற்றும் வர்த்தக மையங்களை இலக்காக  கொண்டு தீ தடுப்பு விழிப்புணர்வு நடவடிக்கைகைளை தாங்கள் மேற்கொண்டு வருவதாக  அவர் சொன்னார்.

அசம்பாவிதங்கள் நிகழ்வதை தடுப்பதற்கு ஏதுவாக சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு முன்னர் வீடுகளில் பாதுகாப்பு அம்சங்களை வலுப்படுத்தும் படியும் அவர் பொதுமக்களை கேட்டுக் கொண்டார்.

பெருநாள் காலங்களில் விபத்துகளின் எண்ணிக்கை அதிகரிப்பதால் பாதுகாப்பு மீதான விழிப்புணர்வு பொதுமக்கள் மத்தியில் அதிகரிக்கப் படுவது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

விரும்பத்தகாத சம்பவங்கள் நிகழ்வதைத் தடுக்க பெருநாள் காலத்தில் பட்டாசுகள் மற்றும் வாண வெடிகள்  வெடிப்பதில் மிகுந்த கவனமாக இருக்கும்படியும் அவர் நினைவுறுத்தினார்.


Pengarang :