ECONOMY

நெடுஞ்சாலைகளில் சீரான போக்குவரத்து- வழக்கத்திற்கு மாறான நெரிசல் இல்லை

கோலாலம்பூர், ஏப் 21– நோன்புப் பெருநாளை முன்னிட்டு பொதுமக்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பும் காரணத்தால் நாட்டில் உள்ள முக்கிய நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து அதிகரித்து வாகனங்கள் மெதுவாக நகர்ந்த வண்ணம் உள்ளன.

இருப்பினும், நேற்றிரவு 10.00 வரை நிலைமை மேம்பாடு கண்டு வருவதோடு வழக்கத்திற்கு மாறான போக்குவரத்து நெரிசலும் காணப்படவில்லை.

கிழக்கு கரை நெடுஞ்சாலையைப் பொறுத்தவரை கோம்பாக் டோல் சாவடி தொடங்கி பெந்தோங் வரையிலும் காராக் டோல் சாவடிக்கு முன்பாகவும் நெரிசல் வாகனங்கள் மெதுவாக நகர்ந்த வண்ணம் இருந்ததாக மலேசிய நெடுஞ்சாலை வாரியம் கூறியது.

எனினும், கிழக்கு கரை நெடுஞ்சாலை 2 இல் கோலதிரங்கானு டோல் சாவடியில் நேற்று மாலை காணப்பட்ட நெரிசல் தற்போது சீரடைந்து விட்டதாக அது தெரிவித்தது.

வடக்கு நோக்கிச் செல்லும் பிளஸ் நெடுஞ்சாலையில் சிலிம் ரிவர், சுங்கை, தாப்பா, கோப்பெங், மற்றும் கோல கங்சார் நோக்கிச் செல்லும் மெனோரா சுரங்கப்பாதை ஆகிய பகுதிகளில் வாகனங்கள் மெதுவாக பயணிப்பதை காண முடிந்தது.

இதனிடையே, ரவாங் செலாத்தான்-ரவாங் வரையிலான 445 வது கிலோ மீட்டர் மற்றும் தாப்பா முதல் கோப்பெங் வரையிலான 296.7வது கிலோ மீட்டரில் விபத்து நிகழ்ந்த தாகவும் எனினும், இந்த விபத்தினால் சாலைகள் வழித்தடங்கள் எதுவும் மூடப்படவில்லை என்றும் பிளஸ் நிறுவனம் கூறியது.


Pengarang :