SELANGOR

ஜெலஜா ஏசான் ரக்யாட் திட்டம் அடுத்த வாரம் முதல் வழக்கம் போல் தொடரும்

ஷா ஆலம், ஏப்.26: பொதுமக்கள் அடிப்படை தேவைகளை எளிதாகப் பெறுவதற்காக ஜெலஜா ஏசான் ரக்யாட் (JER) திட்டம் அடுத்த வாரம் முதல் வழக்கம் போல் தொடர்கிறது.

கோழி, முட்டை, இறைச்சி மற்றும் மீன் போன்ற பொருட்களின் மலிவு விற்பனை காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறும் என்று சிலாங்கூர் விவசாய வளர்ச்சிக் கழக குழுவின் தலைமை நிர்வாக அதிகாரி தெரிவித்தார்.

“ஒவ்வொரு நாளும் ஒன்பது இடங்களில் வழக்கம் போல் இந்த விற்பனை தொடரும். பண்டிகை காலத்தில் பலருக்கும் மலிவான விலையில் பொருட்கள் தேவை என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம்.

“இந்த திட்டத்தின் நோக்கம் மக்களுக்கு உதவுவதாகும். சந்தை விலையுடன் ஒப்பிடும்போது இங்கு விற்கப்படும் பொருட்களின் விலை மலிவானது” என்று டாக்டர் முகமட் கைரில் முகமட் ராஸி சிலாங்கூர்கினியிடம் கூறினார்.

பொதுமக்கள் அவ்வப்போது விற்பனை இடங்களைப் பற்றிய அறிய linktr.ee/myPKPS என்ற இணைப்பைப் பார்வையிடலாம்.

பொது மக்களின் ஆதரவை தொடர்ந்து மாநில அரசு இந்த மலிவு விலை திட்டத்தை ஜனவரி 16ம் தேதி முதல் மே மாதம் வரை 1200 இடங்களில் மேற்கொள்கிறது.

Pengarang :