SELANGOR

புயல்காற்றில் விழுந்த மரங்களை எம்.பி.கே.எல். விரைவு பணிக்குழு அகற்றியது

ஷா ஆலம், ஏப் 27- கடுமையான புயல்காற்று மற்றும் கனத்த மழையின்
காரணமாக மூன்று இடங்களில் மரங்கள் விழுந்து போக்குவரத்துக்கு
ஏற்பட்ட இடையூறை சரி செய்யும் பணியில் கோல லங்காட்
நகராண்மைக் கழகத்தின் ஸ்குவாட் பந்தாஸ் எனும் விரைவு பணிக்குழு
ஈடுப்பட்டது.

மரங்கள் விழுந்த காரணத்தால் தெலுக் பங்ளிமா காராங்கில் உள்ள
தாமான் டத்தோ ஹொர்மாட், ஜாலான் மெங்குவாங் 26 சாலையில்
போக்குவரத்து பாதிக்கப்பட்டதாக நகராண்மைக் கழகம் கூறியது.

சாய்ந்த மரங்களை வெட்டி அப்புறப்படுத்தி போக்குவரத்தைச் சீர் செய்யும்
பணி மாலை 6.00 மணிக்கு முற்றுப் பெற்றதாக நகராண்மைக் கழகம்
தனது பேஸ்புக் பதிவில் தெரிவித்தது.

சிஜங்காங், தாமான் ஸ்ரீ மேடானில் மரம் விழுந்த சம்பவம் தொடர்பில்
மாலை 6.11 மணியளவில் மற்றொரு புகாரைத் தாங்கள் பெற்றதாக அது
மேலும் குறிப்பிட்டது.

கூடுதலாக நான்கு உறுப்பினர்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்த
விரைவு பணிக்குழு நர்சரி ஒன்றின் உர சேமிப்பை கிடங்கின் மீது விழுந்த
மரத்தை வெட்டி அப்புறப்படுத்தியது. இப்பணி இரவு 10.30 மணிக்கு
முடிவுக்கு வந்தது.

புக்கிட் சங்காங், ஆர்.டி.பி. இஸ்லாமிய மையத்து கொல்லைக்குச் செல்லும்
வழியில் செம்பனை மரம் விழுந்தது தொடர்பில் புகார் கிடைத்ததைத்
தொடர்ந்து அங்கு விரைந்த பணிக்குழுவினர் அந்த மரத்தை அங்கிருந்து
அகற்றியதோடு மரம் விழுந்ததால் துண்டிக்கப்பட்ட மின் கம்பிகளைத்
தெனாகா நேஷனல் பணியாளர்களின் உதவியுடன் சரி செய்தனர்.


Pengarang :