SELANGOR

ஜெலாஜா எஹ்சான் ரக்யாட் நிகழ்வில் 350க்கும் மேற்பட்ட கோழிகள் விற்பனை

பெட்டாலிங் ஜெயா, மே 2: இங்குள்ள கம்போங் செம்பாக்கா கூடைப்பந்து மைதானத்தில் ஜெலாஜா எஹ்சான் ரக்யாட் நிகழ்வில் 350க்கும் மேற்பட்ட கோழிகள் இன்று விற்றுத் தீர்ந்தன.

பண்டார் உத்தாமா தொகுதியில் மலிவு விற்பனை திட்டத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது, 400க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள்  அங்கு விற்கப்பட்ட  அடிப்படைத் தேவை பொருட்களை வாங்க  காலை 8 மணி முதல் வரிசையில் காத்திருந்தனர்.

பெர்மாத்தா இக்ஸான் சிலாங்கூர் வேளாண்மை மேம்பாட்டுக் கழகத்தின் தலைவர் நோர்சிலா பாருடின் கூறுகையில், கோழியைத் தவிர, முட்டை மற்றும் அரிசி ஆகியவையும் அதிகம் விற்பனையாகும் பொருட்களில் அடங்கும்.

“மக்கள் இன்னும் விடுமுறை மற்றும் பண்டிகை மனநிலையில் இருந்தாலும் வரவேற்பு மிகவும் ஊக்கமளிக்கும் வகையில் இருந்தது.

“இந்த மாத இறுதி வரை பல நிகழ்வுகள் மற்றும் திறந்த இல்ல உபசரிப்பு கள் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளதால் வருகையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்,” என அவரைச் சந்தித்தபோது கூறினார்.

முன்னதாக அத் தொகுதி சட்டமன்ற  உறுப்பினர்  ஜமாலியா ஜமாலுடினும் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உள்ளூர் மக்களைச் சந்தித்ததோடு விற்பனை செயல்முறையையும் ஆய்வு செய்தார்.


Pengarang :