ECONOMYSELANGOR

மாநிலம் முழுவதும் சாலைகளைச் செப்பனிடும் பணி இரு வாரங்களில் தொடங்கும்

ஷா ஆலம், மே 7- மாநிலம் முழுவதும் உள்ள பழுதடைந்தச் சாலைகளை பெரிய அளவில் செப்பனிடும் பணி இன்னும் இரு வாரங்களில் தொடங்கும் என்று அடிப்படை வசதிகள் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் கூறினார்.

இருபதுக்கும் மேற்பட்ட குத்தகையாளர்களை உள்ளடக்கிய இந்த திட்டம் இரு மாதங்களில் முழுமைப் பெறும் என்று இஞ்சினியர் இஷாம் ஹஷிம் தெரிவித்தார்.

கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்ட ஐந்து கோடி வெள்ளி நிதியில் மேற்கொள்ளப்படும் இந்த திட்டத்தில் மோசமான நிலையில் உள்ள மற்றும் இதுவரை கவனம் செலுத்தப்படாத சாலைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று அவர் சொன்னார்.

இந்த திட்டத்தில் ஊராட்சி மன்றங்கள், மாவட்ட மன்றங்கள் மற்றும் பொதுப்பணி இலாகாவினால் பரிந்துரைக்கப்பட்ட திட்டங்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.

மாநில அரசின் கீழ் உள்ள சாலைகளை சீரமைக்கும் மற்றும் விரிவுபடுத்தும் பணிகள் பெரிய அளவில் மேற்கொள்ளப் படவுள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கடந்த ஜனவரி மாதம் 16ஆம் தேதி கூறியிருந்தார்.

பழுதடைந்த சாலைகள் தொடர்பான தகவல்களை பொது மக்கள் படங்களுடன் டிவிட்டர் வாயிலாக தங்களுக்குத் தெரிவிக்கலாம் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

சிலாங்கூர் அரசின் சாலை பராமரிப்பு நிறுவனமான இன்ப்ராசெல் கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் இதுவரை 39,000 சாலை சீரமைப்பு பணிகளை மேற்கொண்டுள்ளது. பொதுமக்கள் அளிக்கும் புகார்களின் அடிப்படையில் 24 மணி நேரத்தில் சம்பந்தப்பட்ட சாலைகள் சீரமைக்கப் படுகின்றன,


Pengarang :