MEDIA STATEMENTPENDIDIKAN

கிள்ளான்,  மிட்லெண்ட்ஸ்  தோட்டத் தமிழ்ப் பள்ளிக்கு ரி.ம. 100,000.00 உதவித்தொகை எம்.ஆர்.சி.பி அறவாரியம் வழங்கியது

கிள்ளான். மே. 25- சிலாங்கூர் மாநிலத்தில் புகழ் பெற்ற தமிழ்ப் பள்ளிகளில் ஒன்றான மிட்லெண்ட்ஸ்  தோட்டத் தமிழ்ப் பள்ளிக்கு ரி.ம. 100,000.00 உதவித்தொகை வழங்கப் பட்டது.  இந்நிகழ்ச்சிக்கு கோத்தா அங்கெரிக்  சட்டமன்ற உறுப்பினர் துவான் நஜ்வான் ஹலிமி தலைமை தாங்கினார்.

இந்நிகழ்ச்சியில் அப்பள்ளியின்  தலைமை ஆசிரியர்  திருமதி. தேவமணி, பள்ளி வாரியத் தலைவர் உதயசூரியன், பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் முனியாண்டி இளங்கோவன், எம்.ஆர்.சி.பி நிறுவனத்தின் நடவடிக்கை தலைவர் துவான் பரமசிவம் அருணாசலம், எம்.ஆர்.சி.பி யின் நிறுவன அதிகாரிகள், எம்.ஆர்.சி.பி.யின் அறவாரிய அதிகாரிகள், வாரிய உறுப்பினர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்கப் பொறுப்பாளர்கள், மற்றும் மாணர்களும் திரளாக கலந்து கொண்டனர்.

ஒரு லட்சம் ரிங்கிட் உதவித் தொகையுடன் பள்ளி மாணவர்களுக்கு புத்தகப் பை மற்றும் உதவிப் பொருட்களும் வழங்கப் பட்டது.

வழங்கப் பட்ட உதவித்தொகை முற்றிலும் மாணவர்கள் நலனுக்காக மட்டுமே பயன்படுத்தப்படும். பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் அங்கீகாரத்துடன் இந்நிதி முறையாகப் பயன் படுத்த படும் என்று பள்

ளியின் வாரியத் தலைவர் உதயசூரியன் வரவேற்புரை ஆற்றுகையில் கூறினார்.

பள்ளியையோட்டி  எல்.ஆர்.டி 3 கட்டுமானப் பணிகள் கடந்த சில ஆண்டுகளாக நடை பெற்றுக் கொண்டிருக்கிறது. இந்தக் கட்டுமானப் பணிகள் பள்ளிக்குப் பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்தியுள்ளன. இதனால் பல முறை விவாதங்கள் , பேச்சு வார்த்தைகள் நடை பெற்றுள்ளன. இப்பேச்சு வார்த்தையில் இரு தரப்பு கிடையே நடுவராக இருந்து இப்பிரச்சனைகள் முறையாகத் தீர்வு கண்டுள்ளார் இத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் துவான் நஜ்வான் ஹலிமி.

இந்தச் சிறப்பு நிகழ்ச்சிக்கு வருகை தந்து பள்ளியின் தலைமை ஆசிரியர் தேவமணி, வாரியத் தலைவர் உதயசூரியன், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் இளங்கோவன் முனியாண்டி ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

எம்.ஆர்.சி.பி.யின் நிறுவனத்தின் சார்பில் கிள்ளான் மாவட்டத்தின் போலீஸ் படையின் முன்னாள் தலைவரும் இந்நாள் எம்.ஆர்.சி.பி.யின் நடவடிக்கை தலைவருமான துவான் பரமசிவம் அருணாசலம் அதன் உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டு இந்த நிதிக்கான மாதிரி காசோலை வழங்கினர். தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் துவான் நஜ்வான் ஹலிமி இருதரப்பு சார்பில் சிலாங்கூர் மாநில அரசு சார்பிலும் கலந்து கொண்டு தலைமை வகித்தார் என்பது குறிப்பிடத் தக்கது.


Pengarang :