ECONOMYMEDIA STATEMENTNATIONAL

திறமையான  குடும்பத் தலைவிகளின் கைகளே  நல்ல குடும்பத்திற்கு  திறவுக்கோள்.   – கோலசிலாங்கூர் நாடாளுமன்ற உறுப்பினர்.

கோலசிலாங்கூர் ஜூன் 7 ;- கற்றல் அனைவருக்கும்  எப்போதும் அவசியம் , .திறமையான  குடும்பத் தலைவிகளின் கைகளே  நல்ல குடும்பத்திற்கு  திறவுக்கோள் என கோலசிலாங்கூர் நாடாளுமன்ற உறுப்பினர் கூறினார்.

ஜெராம்  தாமான் பெகெர்த்தி மண்டபத்தில் சித்தம் சிலாங்கூர்,  இந்தியர்  சமூக தலைவர்,  ஜெராம்  சட்டமன்ற தொகுதி உடன் இணைந்து ஏற்பாடு செய்த  கை விரல் நக ஒப்பனைக் கலைத்திறன் பயிற்சிக்கு வருகை அளித்த  கோலசிலாங்கூர் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஸ்ரீ  டாக்டர் சூல்கிப்லி  அவர்கள்  இப்பயிற்சியில்  அதிகமான இந்திய பெண்கள் கலந்து கொண்டமைக்கு  அவர்களை பாராட்டி வரவேற்றார்.

நீங்கள்  இந்த கலைத்திறன் பயிற்சியில்  கலந்து கொண்டிருக்கிறீர்கள். இப்படிப்பட்ட பயிற்சியில் கலந்து கொண்டதன் வழி நாட்டில்  உள்ள மற்ற பெண்களுக்கு  முன் உதாரணமாக இருக்கிறீர்கள் என்றார் அவர்.

இங்கு கற்பிக்கப்படுவதை  திறமையுடன்  கற்று, அன்றாட வாழ்வில் அக்கலையை  பயன்படுத்துவதன் மூலம், அக்கலை  அழியாமல் காப்பாற்ற படும். கற்றதை குடும்ப உறுப்பினர்களுடன்  பகிர்ந்து கொள்வதன் வழி  அது குடும்ப தொழிலாகவும்  வளரும்.  இதனை மற்றவர்களுடன்  தொழில் ரீதியாக பயன்படுத்துவதன்  வழி பொருளாதார   ரீதியாகவும் பயன் விளைவிக்கும் என்றார்.

இன்றைய காலக் கட்டத்தில் இது போன்ற பயிற்சிகள் மிக அவசியமான ஒன்றாக விளங்குகிறது. நீங்கள் திறமையை வளர்த்துக் கொள்ள ஆர்வமாக இருக்கிறீர்கள்,  கற்றல் அனைவருக்கும்  எப்போதும் அவசியம் , அது மனிதர்களின் மாண்பை உயர்த்தும்.

அது மட்டுமின்றி நாகரீக காலத்தில் பெண்களின் ஆற்றலை , திறமையை  வைத்து உலகம்  அவர்களை மதிப்பிடுகிறது.  ஆக நீங்கள்  வீட்டிலும் , வெளியிலும் மதிக்கப்பட வேண்டும் . அதற்கு  இது போன்ற பயிற்சிகள் உங்களுக்கு  கை கொடுக்கும்.

இன்று  உங்களில்  பெருவாரியானவர்கள்  இதுபோன்ற  பயிற்சியில்    கலந்து கொண்டது,   உங்கள் ஆற்றலை மேம்படுத்துவதில் நீங்கள் காட்டும் ஆர்வத்தை அக்கறையின்  பிரதிபலிப்பு என  அவர் பாராட்டினார்.

.திறமையான  குடும்பத் தலைவிகளின் கைகளே  நல்ல குடும்பத்தின்  திறவுக்கோள். நீங்கள் கற்றதே  உங்களை உயர்த்தும்.  இது குடும்ப தொழிலாகவும்  வளரும்.  உங்கள்  நேரமும்  பயனான முறையில்  செலவிட்ட மன நிம்மதி கிடைக்கும் என்றார்.

பயிற்சி நிறைவைத் தொடர்ந்து  இன்றைய  நிகழ்விற்கு சிரமம் பாராமல் வருகை அளித்த பங்கேற்பாளர்களுக்கும் , சித்தம் சிலாங்கூர் தலைவர் கென்னத் சேம், அதன் துணைத் தலைவர் சரவணன், பெர்மாத்தாங் இந்தியர் கிராமத்து தலைவர் பத்மநாபன், மற்றும்,தோக் யாசிட் அவர்களுக்கும்  தனது   மனமார்ந்த நன்றியை  தெரிவித்துக் கொண்டார் இப்பயிற்சியின் ஏற்பாடு குழுவின் தலைவரும்,,ஜெராம்  இந்தியர்களின் கிராமத்து தலைவருமான திரு : மணிவண்ணன்


Pengarang :