MEDIA STATEMENTPENDIDIKAN

நைகல் கார்டன் – புக்கிட் தாகார் தோட்ட மாணவர்களுக்கு பள்ளி  வேன்  வாங்க அமைச்சர் சிவகுமார் வெ.50,000  மானியம்

பத்தாங் காலி ஜூன் 18- உலுசிலாங்கூர் தொகுதியில் உள்ள நைகல் கார்டன் மற்றும் புக்கிட் தாகார் தோட்டப் பாட்டாளி பிள்ளைகள் பள்ளிக்கு சென்று வருவதற்கு வசதியாக புதிய வேன் வாங்க மனிதவள அமைச்சர் வ.சிவகுமார் 50,000 வெள்ளி மானியம் வழங்க முன் வந்துள்ளார்.

நைகல் கார்டன் தோட்டத்தைச் சேர்ந்த 21 மாணவர்கள் மற்றும் புக்கிட் தாகார் தோட்டத்தைச் சேர்ந்த 16 மாணவர்கள் ஆரம்ப மற்றும் இடைநிலைப் பள்ளிகளில் பயில்கின்றனர். தோட்டத்து செம்மண் சாலையில் இந்த மாணவர்களை பள்ளிக்கு ஏற்றிச் செல்வதற்கு பொது போக்குவரத்து சேவைகள் இல்லை.

உலு சிலாங்கூர் நகராண்மைக் கழக உறுப்பினர் கலைச்செல்வன் மற்றும் புவனேஸ்வரன்  முயற்சியில் இப்போது 1 லட்சத்து 50 ஆயிரம் வெள்ளியில் தோட்டப் பாட்டாளி பிள்ளைகளுக்கு புதிய வேன் வாங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சுற்று வட்டாரத்தில் உள்ள பல நல்லுங்கள் புதிய வேன் வாங்குவதற்கு உதவ முன் வந்துள்ளனர்.

இந்நிலையில் இவ் விரு தோட்டப் பாட்டாளிகளின் பிள்ளைகளுக்காக  வாங்கப்படும் புதிய வேனுக்கு  50, ஆயிரம் வெள்ளியை வழங்குவதாக  அமைச்சர் வ சிவகுமார் அறிவித்தார்.

நேற்றிரவு பத்தாங் காலியில் நடைபெற்ற கலாச்சார விழாவில் கலந்து கொண்ட  அமைச்சர் சிவகுமார் 500 பேர் மத்தியில் இந்த அறிவிப்பை செய்தபோது தோட்டப் பாட்டாளிகளின் பிள்ளைகள் உற்சாகமாக கைதட்டி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இன்னும் இரண்டு மாதங்களில் புதிய வேன் வாங்கப்பட வேண்டும். இந்த வேனில் நைகல் கார்டன் மற்றும் புக்கிட் தாகார் தோட்டப் பாட்டாளிகளின் பிள்ளைகள் உற்சாகமாக பள்ளிக்கு சென்று வர வேண்டும் என்று மனிதவள அமைச்சர் சிவகுமார் கேட்டுக் கொண்டார்.

பத்தாங் காலி சட்டமன்ற ஒருங்கிணைப்பாளர் துவான் சைபுடின், டமான்சாரா நாடாளுமன்ற உறுப்பினர் கோபிந்த் சிங் சிறப்பு அதிகாரி மண்டிப் சிங் உட்பட 500 க்கும் மேற்பட்ட மக்கள் இந்த நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.

உலுசிலாங்கூர் மாவட்ட கவுன்சிலர் கலைச்செல்வன் மற்றும் புவனேஸ்வரன் முயற்சியில் இந்த விழா மிகவும் விமரிசையாக நடைபெற்ற வேளையில்   கவிமாறன் அறிவிப்பில் கலாச்சார நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.


Pengarang :