MEDIA STATEMENTNATIONAL

மலேசிய தேசியப் பதிவு துறை ஒரு குடும்பத்தில் நால்வருக்கு பிறப்பு பத்திரம் வழங்கியது  

ஷா ஆலம் ஜூலை  6 ;- இருபத்து எட்டு ஆண்டுகளாக  பிள்ளைகளுக்கு  பிறப்பு பத்திரமின்றி ஒரு குடும்பம் தத்தளித்துள்ளது.   கடந்த 8 ஆண்டுகளாக   முயற்சித்தும் தோல்வியடைந்த  நேரத்தில், சிலாங்கூர்  மைசெல்  அதிகாரி திரு. ரகுபதியின் உதவியுடன்  ஓராண்டுக்குள் ஒரே நேரத்தில்   4 பிளைகளுக்கு பிறப்பு பத்திர விண்ணப்பங்களைத் தேசிய பதிவுத் துறை அங்கீகரித்துள்ளது  தங்களுக்கு  மகிழ்ச்சி அளிப்பதாக அவர்களின்  சின்னம்மாள் திருமதி ரத்னா கூறினார்.

சிலாங்கூர் மாநில அரசின் உதவியுடன்  கடந்த 2010 ம்  ஆண்டு முதல்  மை செல்  என்னும் ஒரு சிறப்பு பிரிவு  செயல் படுகிறது.   இது   அடையாள பத்திரங்கள்  இன்றி  அவதிப்படும் மக்களின்  இன்னல்களை  போக்க  அனுபவம்  வாய்ந்த  சில அரசு சார  இயக்க   உறுப்பினர்களின்   உதவியுடன் அடையாளப்பத்திர  விவகாரங்களை கையாள்கிறது.

4 பிளைகளுக்கு பிறப்பு பத்திரங்களை பெற்றப்பின் மகிழ்ச்சியுடன்  காணப்பட்ட அக் குடும்பத்தினர்.  பிறப்பு பத்திர பிரச்சனையைக் குறுகிய காலத்தில் தீர்க்க முடிந்ததில்  தாங்கள்  மிகவும் மகிழ்ச்சி அடைவதாகவும்.  இவ்வேளையில்  மைசெல்  வழி அவர்களுக்கு  வழங்கப்பட்ட உதவிக்கு  சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரிக்கும் சிலாங்கூர் மாநில அரசின் எஸ்கோ YB. கணபதிராவுக்கும் தங்கள் நன்றியினை தெரிவித்து கொண்டது.  

அதே நாளில், பிறப்பு பத்திர ஒப்புதல் பெற்ற அந்நால்வருக்கும் நீல அடையாள அட்டை விண்ணப்பத்திற்குப் தேசியப் பதிவுத் துறை ஒப்புதல் அளித்துள்ளதாகவும்  அவர் குறிப்பிட்டார்.

பிறப்பு பத்திரம் அங்கீகரிக்கப்பட்டவர்களின் பெயர்களின் பட்டியல்.

  1. யோகேஸ்வரன் 28
  2. பியூரிடன் 27
  3. ஈஸ்வரி 26
  4. தினேஷ் குமார் 25

Pengarang :