MEDIA STATEMENT

சிலாங்கூரைத் தற்காக்க புது முகங்களை நிறுத்துகிறது தேசிய முன்னணி

உலு லங்காட், ஜூலை 8- சிலாங்கூர் மாநிலத் தேர்தலில் புது முகங்களை வேட்பாளர்களாக தேசிய முன்னணி களமிறங்க உள்ளது.

மாநிலத்தை ஒற்றுமை அரசாங்கம் தொடர்ந்து வழிநடத்துவதை உறுதி செய்வதற்காக பக்கத்தான் ஹராப்பான் கூட்டணியின் வெற்றிக்காக தேசிய முன்னணி இயந்திரம் அயராது பாடுபடும் என்று அவர் தேசிய முன்னணித் தலைவர் டத்தோ ஸ்ரீ அகமது ஜாஹிட் ஹமிடி கூறினார்.

புத்துணர்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக வரும்  ஜூலை 29 ஆம் தேதி நாம் புது முகங்களை களமிறக்க உள்ளோம். நமது வேட்பாளர்கள் ஹராப்பான் முன்மொழியும் என்று அவர் சொன்னார்.

மாநிலத்திலுள்ள சில தொகுதிகளில் போட்டியிடுவதற்கு வாய்ப்பு வழங்கிய ஹராப்பான் கூட்டணிக்கு நாங்கள் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

நேற்றிரவு இங்கு நடைபெற்ற சிலாங்கூர் ஒற்றுமை அரசின் தேர்தல் இயந்திரத்தின் தொடக்க நிகழ்வில் உரையாற்றிய போது அவர் இவ்வாறு சொன்னார்.

சிலாங்கூரில் ஒற்றுமை அரசாங்கம் அமைக்கப்படும் என்பதோடு அதில் ஒரு அங்கமாக தேசிய முன்னணியும் விளங்கும் என துணைப் பிரதமருமான அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

கிளந்தான் மாநிலத்தை ஹராப்பான் வெற்றி கொண்டால் சிலாங்கூரைப் போல் வளர்ச்சியடைந்த மாநிலமாக அதனை மற்ற மத்திய அரசு உதவும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

கிளந்தான் மாநிலத்தில் நாம் வெற்றி பெற்றால் அம்மாநிலத்தை நாம் மேம்படுத்த முடியும். ஆறு மாநிலங்களில் நாம் வெளியிட்டுள்ள தேர்தல் கொள்கையறிக்கை செயல்படுத்தப்படும் என்பதை வரும் ஆகஸ்டு 12ஆம் தேதி நிரூபிப்போம் என்றார் அவர்.

இதனிடையே, இந்த தேர்தலில் போட்டியிடுவதில்லை என்று மஇகா மற்றும் மசீசவின் முடிவைத் தாம் மதிப்பதாக அகமது ஜாஹிட் கூறினார்.

மஇகா மற்றும் மசீச ஆகிய பங்காளிக் கட்சிகள் இத்தேர்லில் வேட்பாளர்களை முன்னிறுத்துவதில்லை என முடிவெடுத்துள்ளன. அவர்கள் தொடர்ந்து நம்முடன் இருப்பார்கள் என்பதோடு ஆறு மாநிலங்களிலும் ஒற்றுமை அரசாங்கத்தின் வேட்பாளர்களை ஆதரிப்பர் என அவர் குறிப்பிட்டார்.


Pengarang :