ECONOMYMEDIA STATEMENTNATIONAL

சிலாங்கூர் தேர்தலில் துரோகிகளை விரட்டியடிப்போம்  துணைப் பிரதமர் சூளுரை.

செய்தி சு.சுப்பையா

பாங்கி.ஜூலை.7- பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் சிலாங்கூரில் உள்ள அரசியல் துரோகிகளை விரட்டியடிப்போம் என சூளுரைத்தார் நாட்டின் துணை பிரதமரும் தேசிய முன்னணியின் தலைவருமான டத்தோ ஸ்ரீ ஜஹிட் ஹமிடி. சிலாங்கூர் தேசிய முன்னணியிலும் பி.கே.ஆர் கட்சியிலும் துரோகிகள் இருக்கின்றனர் குறிப்பாக பி.கே.ஆர் கட்சியிலிருந்து துரோகம் செய்த அஸ்மின் அலி மற்றும் அம்னோவிலிருந்து கடந்த பொதுத் தேர்தலில் கட்சிக்கு துரோகம் செய்த டான் ஸ்ரீ நோ ஒமார் ஆகியோரை அரசியல் அரங்கில் இருந்து விரட்டியடிக்க வேண்டும் அலைக்கடலென திரண்டிருந்த தொண்டர்களை பார்த்து கூறினார். தொடர்ந்து சிலாங்கூர் மாநில அம்னோத் தலைவரான டத்தோ வீர மெகாட் சுள்கர்னையின் பார்த்து இதனை வெற்றி கரமாக நிறைவேற்றுங்கள் என கேட்டுக் கொண்டார்.

அரசியல் துரோகிகள் என அஸ்மின் பெயரைச் சொல்வதற்கு முன்பே அஸ்மின் என அரங்கமே கூச்சலிட்டது. 
 
இந்த 6 மாநில தேர்தலில் நாட்டில் உள்ள 2 மா பெரும் அரசியல் சக்திகள் ஒன்று இணைந்து களம் காண்கிறது. இந்த 2 கூட்டணிகளும் ஒன்று இணைந்து பாஸ் மற்றும் பெர்சத்து கட்சிகளை சிலாங்கூரை விட்டு விரட்டியடிக்க வேண்டும். சிலாங்கூர், நெகிரி, பினாங்கு, கெடா, திரங்கானு மாநில அரசை நாம் கைப்பற்றுவதோடு கிளாந்தானிலும் வலுவான போட்டியை பாஸ் கட்சிக்கு கொடுக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
 
சிலாங்கூர் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்று மிக நீண்ட காலமாக நோ ஒமாரை அம்னோ மாநிலத் தலைவராக நியமித்தேன். ஆனால் அவர் ஒரு தோல்வி அடைந்த தலைவர் என்பதை நிரூபித்து விட்டார். இந்த தோல்வி அடைந்த தலைவரை சிலாங்கூர் அரசியலிருந்து விரட்டியடிக்க வேண்டும்.
 
டத்தோ ஸ்ரீ அமிருடின் சாரி ஒரு இளைஞர் ஆனால் சிறப்பான தலைமைத்துவம் கொண்டவர், சிலாங்கூரை சிறப்பாக ஆட்சி செய்கிறார் என்று வெகுவாக பாராட்டினார்.
 
கடந்த ஆண்டு நாட்டு வருவாயிலிருந்து 25.5% வருமானம் சிலாங்கூரில் இருந்து வந்தது என்று புள்ளி விபரத் துறை தகவல் வெளியிட்டுள்ளது. இது அஸ்மின் காலத்தை விட சிறந்த அடைவு நிலையாகும் என்று பாராட்டினார்.
 
சிலாங்கூர் மாநிலத்தில் நம்பிக்கை கூட்டணி வேட்பாளர்களின் வெற்றியை தேசிய முன்னணித் தொண்டர்கள் கடுமையாக உழைக்க வேண்டும். இதே போல் தேசிய முன்னணி வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்ய நம்பிக்கை கூட்டணி தலைவர்களும் உறுதி செய்ய வேண்டும் என்று தொண்டர்களை பார்த்து கேட்டுக்கொண்டார். வருகை தந்திருந்த தொண்டர்களும் மிகவும் உற்சாகத்துடன் சரி என்று அரங்கம் அதிர கத்தினர்.
 
தேசிய முன்னணியும் நம்பிக்கை கூட்டணியும் வெற்றியை குறி வைத்து ஒரே நோக்கத்துடன் செயல் பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
 
உடல் நலமில்லாமல் ஓய்வில் இருந்தாலும் சிலாங்கூர் மாநில ஒற்றுமை அரசாங்கத்தின் தேர்தல் இயந்திரம் வெள்ளோட்டம் நிகழ்ச்சியில் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் என்ற வேட்கையில் வந்திருப்பதாகக் கூறினார்.
 
சிலாங்கூர் முன்னேறிய மாநிலம். சிலாங்கூரை கைப்பற்றி கிளாந்தான் மாநிலமாக மாற்றப் போகிறதா பாஸ் கட்சி என ஆவேசத்துடன் கேள்வி எழுப்பினார். அதே போல் தான் நெகிரி, பினாங்கு மாநிலங்களும். இந்த 2 மாநிலங்களும் கெடா, கிளாந்தான் , திரங்கானு மாநிலங்களை விட முன்னேறிய மாநிலங்கள். பாஸ் கட்சி இங்கு ஆட்சியை கைப்பற்றி கிளாந்தான் போல பின் தள்ள போகிறாதா என்று கேள்வி எழுப்பினார்.
 
இந்த மாநிலங்களில் இருந்து பாஸ் மற்றும் பெர்சத்து கட்சி விரயடிக்க வேண்டும் என்று ஜஹிட் கேட்டுக் கொண்டார்.

Pengarang :