SELANGOR

ஜென்ஜாரோம் சீன பள்ளியில் சிலாங்கூர் உடல்நலப் பரிசோதனைத் திட்டம்

ஷா ஆலம், ஜூலை 20: எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ஜென்ஜாரோம் சீன பள்ளியில் சிலாங்கூர் உடல்நலப் பரிசோதனைத் திட்டம் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும்.

பொதுமக்கள் கண், பல், காது மற்றும் பிசியோதெரபி போன்ற பரிசோதனைகளை இலவசமாக மேற்கொள்ள வாய்ப்பு உள்ளதாக சுகாதாரத் துறை பொறுப்பு உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா மஹ்மூத் தெரிவித்தார்.

“புற்றுநோய் பரிசோதனைக்கான மாதிரிகளை எடுப்பதுடன், மக்கள் தொற்று அல்லாத நோய் பரிசோதனைக்காக சிறுநீர் மற்றும் இரத்த பரிசோதனைகளையும் செய்யலாம்.

“நீங்களும் உங்கள் குடும்ப உறுப்பினர்களும் இன்னும் சிலாங்கூர் இலவசச் சுகாதாரப் பரிசோதனை சேவையைப் பெறவில்லை என்றால் வாய்ப்பு இன்னும் திறக்கப்பட்டுள்ளது” என்று அவர் இன்று முகநூலில் தெரிவித்தார்.

செலங்கா (SELangkah) செயலி மூலம் உடனடியாகப் பதிவு செய்யுமாறு பொதுமக்களை டாக்டர் சித்தி மரியா கேட்டுக்கொண்டார்.

சிலாங்கூர் இலவசச் சுகாதாரப் பரிசோதனை திட்டம் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டம் குடியிருப்பாளர்கள் நோய்களை முன்கூட்டியே கண்டறிய உதவுகிறது.

மாநில அரசால் முழுமையாக ஏற்கப்படும் RM3.4 மில்லியன் செலவில், பங்கேற்பாளர்கள் சிறுநீர், கண், கர்ப்பப்பை, மார்பகம் மற்றும் புரோஸ்டேட் புற்றுநோய் பரிசோதனைகள் மற்றும் இரத்தப் பரிசோதனைகளை மேற்கொள்ளலாம்.


Pengarang :