SELANGOR

பெட்டாலிங் மாவட்டத்தில் சாலை சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன

ஷா ஆலம், ஜூலை 21: இன்ஃப்ராசெல் நிறுவனத்தால் கடந்த மே மாதம் முதல் மேற்கொள்ளப்பட்ட பெரிய அளவிலான சாலை சீரமைப்புப் பணிகள் நேற்று பெட்டாலிங் மாவட்டத்திலும் தொடரப்பட்டன.

இத்திட்டத்தின் மூலம் ஜாலான் பெர்சியாரன் பூச்சோங் பெர்மாய் சுபாங் ஜெயா சாலைகளில் கோடுகள் வரையும் பணி மேற்கொண்டதாக மாநிலச் சாலை பராமரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

“இந்தப் பணிகள் சாலைப் பயணிகளுக்கு ஓரளவு பயனைத் தரும் என்று நம்புகிறேன்,” என்று அவர் இன்று ட்விட்டரில் தெரிவித்தார்.

சேதமடைந்த சாலைகளை மேம்படுத்துவது மட்டுமின்றி, புலாவ் மெராந்தி பூச்சோங் பள்ளிவாசலின் வடிகால் அமைப்பு நல்ல நிலையில் உள்ளதா என்பதை உறுதி செய்யும் வகையில் நேற்று அந்த வடிகாலை சுத்தம் செய்யும் பணியும் மேற்கொள்ளப்பட்டது.

ஜூன் 1 முதல், மாநிலம் முழுவதும் மெகா சாலை மேம்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதன்மூலம், சாலைகள்  நல்ல நிலைமையில் இருப்பதை உறுதிசெய்து, பயனரின் பாதுகாப்பை மேம்படுத்தி, விபத்து அபாயத்தைக் குறைக்க முடியும்.


இந்த திட்டமானது பெட்டாலிங்கில் 66 சாலைகளை உள்ளடக்கியது, அதைத் தொடர்ந்து கிள்ளானில் (39), கோம்பாகில் (29), உலு லங்காட்டில் (27), சிப்பாங்கில் (19), சபாக் பெர்ணமில் (17), கோலா லங்காட்டில் (16), கோலா சிலாங்கூரில் (11) மற்றும் உலு சிலாங்கூரில் (8) சாலைகளை உள்ளடக்கியுள்ளது.


Pengarang :