SELANGOR

சமூகத் தோட்டங்கள் வேளாண் சுற்றுலா மற்றும் தாவரவியல் கல்விக்கான தளமாக மாறும்

அம்பாங் ஜெயா, ஜூலை 24: குடியிருப்பாளர்களுடன் சேர்ந்து உருவாக்கிய 52 க்கும் மேற்பட்ட சமூகத் தோட்டங்கள் வேளாண் சுற்றுலா மற்றும் தாவரவியல் கல்விக்கான தளமாக மாறும் சாத்தியம் உள்ளதாக அம்பாங் ஜெயா நகராண்மை கழகம் (எம்பிஏஜே) நம்பிக்கை தெரிவித்துள்ளது.

தோட்டத்தை தொடர்ந்து வெற்றிகரமாக உருவாக்க குடியிருப்பாளர்களுக்கு தேவையான பொருட்கள் வழங்க உள்ளூர் அதிகாரிகள் உதவ தயாராக இருப்பதாக அம்பாங் ஜெயா நகராண்மை கழகத் தலைவர் கூறினார்.

“இந்த சமூகத் தோட்டத் திட்டம் தொடர்ந்து வளரும், நிலைத்திருக்கவும் வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்.

“எனவே, குடியிருப்பாளர்களின் தேவைகளுக்கு நாங்கள் அவ்வப்போது உதவுவோம்” என்று டாக்டர் அனி அஹ்மட் நேற்று கூறினார்.

தாமான் கெராமட்டில் உள்ள AU2 அடுக்கு மாடியின் சமூகத் திராட்சைத் தோட்டத்தை அவர் அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்தார். அத் திறப்பு விழாவிற்குப் பிறகு, டாக்டர் அனியும் நெல் நடவு செய்தார் மற்றும் பழ மரங்கள் உள்ள தோட்டத்தை பார்வையிட்டார்.

சிலாங்கூர் நீர் மேலாண்மை வாரியத்துடன் (LUAS) இணைந்து சுற்றுலா தலமாக மாற்றுவதற்காக அருகில் உள்ள ஆற்றை மேம்படுத்த அம்பாங் ஜெயா நகராண்மை கழகம் திட்டமிட்டுள்ளது என அவர் கூறினார்.

இத்தோட்டத்தின் அருகில் உள்ள ஆற்றின் நீர் அசுத்தமாக இருந்ததைக் கண்டேன். ஆனால், தோட்டம் உருவாக்கப்பட்ட பின், ஆற்றில் குப்பை கொட்டும் நடவடிக்கை மறைமுகமாகத் தடுக்கப்பட்டுள்ளது,” என்றார்.


Pengarang :