ECONOMYNATIONAL

இவ்வாண்டின் முதல் ஆறு மாதங்களில் 7,027 புகார்கள்- உள்நாட்டு வர்த்தக அமைச்சு பெற்றது

கோத்தா பாரு, ஜூலை 25- இவ்வாண்டு ஜனவரி 12 முதல் 30ஆம் தேதி
வரை பயனீடு தொடர்பான 7,027 புகார்களை உள்நாட்டு வர்த்தக மற்றும்
வாழ்க்கைச் செலவின அமைச்சு பெற்றுள்ளது.
அவற்றில் 5,025 புகார்கள் உள்நாட்டு வர்த்தக மற்றும் வாழ்க்கைச்
செலவின அமைச்சின் “அடுவான் சூரி“ எனும் தளத்தின் வாயிலாகப்
பெறப்பட்டதாக அதன் துணையமைச்சர் பவுஸியா சாலே கூறினார்.
“அடுவான் சூரி“ தளத்தின் வாயிலாக இணைய பண பரிமாற்ற மோசடி
தொடர்பில் 2,003 புகார்களும் விலை தொடர்பில் 1,903 புகார்களும் குழப்பம்
தரும் சேவை தொடர்பாக 1,119 புகார்களும் பெறப்பட்டன என்று அவர்
சொன்னார்.
கிளந்தான் மாநிலத்தில் பெறப்பட்ட 732 புகார்களில் 236 “அடுவான் சூரி“
தளத்தின் வாயிலாக செய்யப்பட்டவை என்று அவர் மேலும் தெரிவித்தார்.
கோத்தா பாரு மாவட்ட நிலையிலான மக்கள் டிக்கிர் பாராட் பயனீட்டாளர்
பாடல் போட்டியின் தொடக்க நிகழ்வுக்கு வழங்கிய உரையில்
துணையமைச்சர் இவ்வாறு கூறினார். அவரின் உரையை கிளந்தான்
மாநில உள்நாட்டு வர்த்தக மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சின்
துணை இயக்குநர் அஸ்வாடி ஜாபர் வாசித்தார்.
நாட்டிலுள்ள பல்வேறு தரப்பினரிடமிருந்து நம்பகமான புகார்களைப்
பெறுவதில் உள்நாட்டு வர்த்தக அமைச்சின் காதுகளாகவும் கண்களாகவும்
இந்த “அடுவான் சூரி“ எனும் புகார் தளம் விளங்குகிறது என்று அவர்
குறிப்பிட்டார்.
பொது மக்கள் குறிப்பாக இல்லத்தரசிகள் பயனீடு தொடர்பான புகார்களை
கியு.ஆர். குறியீட்டு வாட்ஸ்அப் செயலி மூலமாக தெரிவிக்கும் நோக்கில்
அமைச்சு உருவாக்கியுள்ள புதிய முன்னெடுப்பாக இந்த அடுவான் சூரி
தளம் விளங்குகிறது.


Pengarang :