SELANGOR

காஜாங்கில் தினசரி  திடக்கழிவுகள் சேகரிப்பு அதிகரிப்பு

காஜாங், ஜூலை 28: காஜாங்கில்  நாள் ஒன்றுக்கு சராசரியாக 900 முதல் 1,000 டன்கள் வரை திடக்கழிவுகள் சேகரிக்கப்பட்டு மாநிலத்திலேயே அதிக அளவு திடக்கழிவுகள் சேகரிக்கப்படும் இடமாக உள்ளது என KDEB கழிவு மேலாண்மை (KDEBWM) தெரிவித்துள்ளது.

சம்பந்தப்பட்ட பகுதியில் ஒவ்வொரு முறையும் பொதுச் சுத்தம் செய்யும் போது அதிகாரிகள் கடுமையான சவாலை எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது காரணம் அப்பகுதி அடர்த்தியானது மற்றும் பெரியது என அதன் நிர்வாக இயக்குநர் டத்தோ ராம்லி முகமட் தாஹிர் கூறினார்.

“KDEBWM சவால்களை எதிர்கொள்கிறது, ஏனெனில் சிலாங்கூரில் உள்ள 12 ஊராச்சிமன்றங்களில்  (PBT) காஜாங் அடர்த்தியானது, எனவே நிறைய குப்பைகள் சேர்கின்றன,” என்று அவர் கூறினார்.

நேற்று டி’ரம்பியா இகான் பாக்கர் உணவகத்தில் சுமார் 70 KDEBWM ஊழியர்களை மதிய உணவின் போது அவர் சந்தித்தார்.  இதில் டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரியும் கலந்து கொண்டார்.

இதற்கிடையில், ஜூலை 29 ஆம் தேதி தொடங்கும் மாநில தேர்தல் காலத்தில் தனது ஊழியர்களை புண்படுத்தாமல், குப்பை சேகரிப்பு விவகாரத்தை அரசியலாக்க கூடாது என்று ராம்லி கேட்டுக் கொண்டார்.

கழிவு மேலாண்மை விவகாரத்தை தயவு செய்து அரசியலாக்க வேண்டாம்.இது எங்களின் பொறுப்பு, பல தரப்பினருடன் இணைந்து சிறப்பாக செயல் படுகிறோம் என்றார்.

சமீபத்தில், ட்விட்டரில் ஒருவர் கம்போங் ஜாவா பத்து 18, உலு லங்காட்டில் குப்பை தொடர்பான வீடியோ ஒன்றைப் பதிவேற்றினார், அது நேர்மையான உண்மையான தகவலை கொண்டிருக்கவில்லை  என கூறப்படுகிறது.

KDEBWM ஊழியர்கள் பின்னர் சமூக ஊடகங்களில் ஒரு வீடியோவைப் பதிவேற்றி குறிப்பிட்ட கிராமத்தில் ஏஜென்சியால் செயல்படுத்தப்பட்ட குப்பை சேகரிப்பு அட்டவணையின் நிலையான செயல்பாட்டு நடைமுறையை (SOP)  குறித்து  தெரிவித்தனர்.


Pengarang :