ECONOMYMEDIA STATEMENTNATIONAL

கோல்ட்பில்ஸ் தோட்ட தமிழ் பள்ளி விவகாரம்  விரைவில் தீர்வு காண்பேன்   மந்திரி புசார் அறிவிப்பு.

செய்தி ;- சு.சுப்பையா
ஈஜோக் கோல்டு பில்ஸ்.ஆகஸ்ட்.2-  கோல்ட்பில்ஸ் தோட்ட தமிழ்ப்பள்ளி விவகாரம் குறித்து தீர்வு காண அரசு சார நடவடிக்கையாளர் மணிமாறன் மாணிக்கம் சிலாங்கூர் மாநில மந்திரி புசாரை அழைத்து வந்திருந்தார். பள்ளிக்கு உடனடியாக வருகை தந்து பள்ளி எதிர்நோக்கும் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பேன் என்று மந்திரி புசார் அமிருடின் சாரி அறிவித்தார்.
பள்ளியின் மின்சாரக் கட்டணம் வாணிப கட்டணமாக இருக்கிறது. அதனால் மின்சாரக் கட்டணம் உயர்ந்துள்ளது. இதற்கு தீர்வு காண வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அதற்கு உடனடியாக தீர்வு காண்பேன். பள்ளியில் திடல் பிரச்சனையாக உள்ளது. இந்த திடல் பிரச்னைக்கும் முறையாக தீர்வு காண்பேன்.
அடுத்து பள்ளியில் தற்போது மாணவர்கள் அதிகரிக்க தொடங்கி விட்டனர். தற்போது 170 மாணவர்கள் படிக்கின்றனர். இதனால் இடப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சனையை மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வேன்.
அருகில் துவான் மீ தோட்ட தமிழ் பள்ளியும் உள்ளது. பண விரயம் இல்லாதவாறு முறையாக தீர்வு காணப்படும்.  சிலாங்கூரில் உள்ள 98 தமிழ் பள்ளிகளுக்க வருடந்தோறும் சிலாங்கூர் மாநில அரசு நிதியுதவி செய்து வருகிறது என்று அவர் மேலும் கூறினார்.
காலை 8.30 மணிக்கு வட்டார அரசியல் தலைவர்கள் வரத் தொடங்கினர். ஆனால் அதற்கு முன்பே மாவட்ட கல்வி இலாகா அதிகாரிகள் வருகை தந்து விட்டனர்.  ஏற்கனவே பெயர் பதிவு செய்தவர்கள் மட்டுமே பள்ளிக்குள் அனுமதிக்க முடியும் என்று தடுத்து நிறுத்தி விட்டனர்.
மந்திரி புசார் குறித்த நேரத்தில் பள்ளி வந்தடைந்தார். பள்ளிக்கு சென்று பள்ளி நிர்வாகம் , வாரிய பொறுப்பாளர்களோடு கலந்து பேசிய பின்னர் செய்தியாளர்களை பள்ளிக்கு வெளியே சந்தித்த போது மேற்கண்டவாறு கூறினார்.

Pengarang :