ALAM SEKITAR & CUACANATIONAL

புயலால் பாதிக்கப்பட்ட 20 வணிகர்களுக்கு சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினர் ரமணன் உதவி

ஷா ஆலம், ஆக 30- கோத்தா டாமன்சாரா பகுதியில் நேற்று மாலை  வீசிய கடும் புயல் காற்றில் செக்சன் 8 பகுதியிலுள்ள 20 வணிகர்களின் அங்காடிக் கடைகளும் உபகரணங்களும் சேதமடைந்தன. 

இந்த இயற்கைப் பேரிடரில் பாதிக்கப்பட்ட வணிகர்கள் தொடர்ந்து வர்த்கத்தில் ஈடுபடுவதற்கும் வருமான இழப்பை எதிர்நோக்காமலிருப்பதை உறுதி செய்வதற்கும் சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஆர்.ரமணன் அவர்களுக்கு உடனடியாக நிதியுதவி வழங்கினார்.

நேற்று முன்தினம் ஏற்பட்ட புயலில் வணிகர்களின் கூடாரங்களும் வர்த்தக உபகரணங்களும் கடுமையாகச் சேதமுற்றன. ஆகவே அவர்களுக்கு உதவும் வகையில் நிதியுதவி வழங்குவதற்கான முயற்சிகளை முன்னெடுத்தோம் என்று அவர் சொன்னார்.

இந்த நிதியைக் கொண்டு அவர்கள் புதிய உபகரணங்களை வாங்கி வர்த்தகத்தை தொடர்ந்து மேற்கொள்வதற்குரிய வாய்ப்பு கிட்டும். இந்த சம்பவத்தினால் அவர்களின் வருமானம் எந்த வகையிலும் பாதிக்கப்படக்கூடாது என்பதே எங்களின் நோக்கமாகும் என்று அவர் சிலாங்கூர் கினியிடம் தெரிவித்தார்.

இச்சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து தனது அரசியல் செயலாளர் அய்டி அமின் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறியதாகவும் அவர் கூறினார்.

பாதிக்கப்பட்டவர்கள் விபரங்கள் சேகரிக்கப்பட்டு அவர்களுக்கு நேற்று நிதியுதவி வழங்கப்பட்டது. இதன் மூலம் அவர்கள் தங்கள் வர்த்தகத்தை தொடர்வ்தற்குரிய வாய்ப்பு கிட்டியுள்ளது என்றார் அவர். 


Pengarang :