ECONOMYMEDIA STATEMENTNATIONAL

கைகலப்பில் அரசு ஊழியர் மரணம்- ஆடவருக்கு ஏழு நாள் தடுப்புக் காவல்

தானா மேரா, செப் 4-  ஜாலான் லாமா பாசீர் பூத்தே-மச்சோங் சாலையில் மருத்துவமனைக்கு எதிரே உள்ள  உணவகம் ஒன்றில் நேற்று நிகழ்ந்த  கைகலப்பில் அரசு ஊழியர் ஒருவர் மரணமடைந்தது தொடர்பான விசாரணையில் உதவுவதற்காக  ஆடவர் ஒருவர் ஏழு நாட்கள் காவலில் வைக்கப்பட்டார்.

 

அந்த 46 வயதுடைய சந்தேக நபரை இன்று தொடங்கி வரும் 10ஆம் தேதி வரை தடுத்து வைப்பதற்கு அனுமதியை  மாஜிஸ்திரேட் அமால் ரஸிம் அலியாஸ் வழங்கினார். குற்றவியல் சட்டத்தின் பிரிவு 302 இன்

கீழ் இந்த சம்பவம் விசாரிக்கப்படுகிறது.

 

 ஜாலான் லாமா பாசீர் பூத்தே-மச்சோங்கில் உள்ள உணவகத்தில் காலை 11.00 மணியளவில் 51 மற்றும் 46 வயதுடைய இருவருக்கிடையே நிகழ்ந்த கைகலப்பில் ஆடவர் ஒருவர் உயிரிழந்ததாக கிளந்தான் மாநில  காவல்துறை தலைவர் டத்தோ முகமது ஜாக்கி ஹருண் நேற்று கூறியிருந்தார்.

 

இந்த கைகலப்பின் விளைவாக 51 வயதான நபருக்கு  இரண்டு கண்களிலும் பலத்த காயங்களும் இடது விலா எலும்பு முறிவும்  முகத்தில் கடுமையான இரத்தப்போக்கு ஏற்பட்டது. அதே நேரத்தில் சந்தேக நபரின் கைகளில் மட்டுமே காயங்கள் ஏற்பட்டன.

 

இந்த சம்பவத்தில் எந்த ஆயுதமும் பயன்படுத்தப்படவில்லை.  காயமுற்ற நபர் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் மச்சோங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். எனினும் சிகிச்சை பலனின்றி அவர் இறந்துவிட்டார்  என்று முகமது ஜாக்கி  கூறினார்.


Pengarang :