SELANGOR

பட்ஜெட் 2024 நாட்டின் பொருளாதாரத்தை முறை படுத்த உதவும்

ஷா ஆலம், செப் 27: ;நாட்டின் பொருளாதாரத்தை முறைபடுத்தம் உந்துதல்களை அக்டோபரில் அரசாங்கம் சமர்ப்பிக்கும் பட்ஜெட் 2024 வழங்கும் என எதிர் பார்க்கப் படுகிறது.

அடுத்த ஆண்டு மக்களின் நலனுக்காக தெளிவான நிதி திட்டத்தை பட்ஜெட் முன்வைக்கும் என்று டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

“கடந்த மாதத்தில் இயற்கை வளங்கள், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சர் நிக் நஸ்மி நிக் அகமதுவால் உருவாக்கிய எரிசக்தி கொள்கையை பின்பற்றி மடாணி பொருளாதார கட்டமைப்பை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வகுத்தார்.

“அதன் பின்னர், நாட்டின் தொழில்துறை வரைப் படத்தை, முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் தெங்கு டத்தோஸ்ரீ ஜஃப்ருல் தெங்கு அப்துல் அஜீஸ் வழங்கினார். இந்த விஷயம் ஏற்கனவே தாக்கல் செய்யப் பட்டிருந்தாலும், இந்த பட்ஜெட் அடுத்த ஆண்டு நிதித் திட்டத்தை இன்னும் தெளிவாகக் காண்பிக்கும்.

இதற்கிடையில், 8,000 பங்கேற்பாளர்களுடன் நேருக்கு நேர் தொடர்பு கொள்வதோடு கூடுதலாக 2024 பட்ஜெட்டுக்கு 10,000 பதில்களைப் போர்டல் மூலம் பெற்றதாக ஸ்டீவன் நிதி அமைச்சகத்திடம் தெரிவித்தார்.

மக்கள், அரசு ஊழியர்கள், தனியார் துறையினர், அரசு சாரா நிறுவனங்கள் (என்ஜிஓக்கள்) மற்றும் மாநில அரசிடம் இருந்து பெறப்படும் ஒவ்வொரு பதில்களும் பரிசீலனைக்கு ஆராயப்படும்.

“100 சதவீத கருத்துக்களை செயல்படுத்த முடியும் என்று நாங்கள் உறுதியளிக்க முடியாது, ஏனெனில் சில நேரங்களில் அதில் முரண்பாடு உள்ளது.

“ஒவ்வொரு துறைக்கும் வெவ்வேறு தேவைகள் உள்ளன, எனவே நாங்கள் அனைத்தையும் சமமாக பரிசீலிப்போம்,” என்று அவர் கூறினார்.


Pengarang :