ALAM SEKITAR & CUACAECONOMY

பத்து பஹாட், அலோர் காஜாவில்  காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் பதிவு

கோலாலம்பூர், அக் 13- இன்று காலை 10.00 மணி நிலவரப்படி ஜோகூர் மாநிலத்தின் பத்து பஹாட் மற்றும் மலாக்காவின் அலோர்காஜா ஆகிய இடங்களில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் பதிவானது.

இவ்விரு பகுதிகளில் காற்று மாசுக் குறியீடு (ஏ.பி.ஐ.) முறையே 152 மற்றும் 151ஆகப் பதிவானதாக சுற்றுச்சூழல் துறையின் காற்றுத் மாசுக் குறியீட்டு மேலாண்மை முறை தனது அகப்பக்கத்தில் கூறியது.

தீபகற்ப மலேசியா மற்றும் சபா, சரவாவின் 47 இடங்களில் காற்றின் மாசுத் தரக் குறியீடு  மிதமானதாக (51-100) இருந்த வேளையில் மேலும் 19 இடங்களில் .அக்குறியீடு 50க்கும் கீழ் பதிவானதாக அது தெரிவித்தது.

சுழியம் முதல் 50 வரையிலான ஏ.பி.ஐ. அளவு சிறப்பானதாகவும் 51 முதல் 100 வரையிலான அளவு மிதமானதாகவும்  101 முதல் 200 வரையிலான அளவு ஆரோக்கியமற்றதாகவும் 201 முதல் 300 வரையிலான அளவு மிகவும் ஆரோக்கியமற்றதாகவும் 300 மேற்ப்பட்ட அளவு ஆபத்தானதாகவும் வகைப்படுத்தப்பட்டுள்து.

நாடு முழுவதும் உள் 68 காற்றுத் தரக் கண்காணிப்பு மையங்களில் பெறப்படும் தகவல்களின் அடிப்படையில்  ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை ஏ.பி.ஐ.அளவீடு தொடர்பான தரவு வெளியிடப்படுகிறது.


Pengarang :