ECONOMYNATIONAL

சம்பள உயர்வுக்கான கொள்கைகளை மேம்படுத்த அரசாங்கம் நடவடிக்கை

கோலாலம்பூர், அக் 13- சம்பள விகிதத்தை அதிகரிப்பதற்கு ஏதுவாக அது சார்ந்த கொள்கைகளை அரசாங்கம் மேம்படுத்தவுள்ளது. குறைந்த பட்ச சம்பள முறையை மறுஆய்வு செய்வது, சிறப்பான வேலை சூழலை உறுதி செய்யக்கூடிய சட்டங்களை இயற்றுவது மற்றும் முன்னேற்றகரமான சம்பள மாதிரியை அமல் செய்வது ஆகியவையும் அவற்றில் அடங்கும்.

மேம்பாட்டைந்த நாடுகளுக்கு இணையாக இருக்கும் வகையில் வருமான பங்களிப்பை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 45 விழுக்காடாக அதிகரிக்கும் நோக்கில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்று நிதியமைச்சு இன்று வெளியிட்ட 2024ஆம் ஆண்டிற்கான பொருளாதார கண்ணோட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொழில் திறன் இல்லாத அந்நியத் தொழிலாளர்களைச் சார்ந்திருப்பதைத் தவிர்த்து தானியங்கி முறைக்கு மாறுவதற்கு ஏதுவாக பல அடுக்கு லெவி முறையை அரசாங்கம் அமல்படுத்தும் என்றும் அந்த அறிக்கை தெரிவித்தது.

“மலேசியா- ஆசியாவின் முன்னணிப் பொருளாதாரம்“ எனும் கருப்பொருளைக் கொண்ட மடாணி பொருளாதார செயல் திட்டத்தின் கீழ் இந்த வியூகங்கள் வரையறுக்கப்பட்டுள்ளன.

 


Pengarang :