ECONOMYNATIONAL

மலேசியா மடாணி கோட்பாட்டிற்கேற்ப தேசிய விளையாட்டுத் தினம் ஏற்பாடு

கோலாலம்பூர்,  அக் 14- ஆரோக்கியமான மற்றும் சுறுசுறுப்பான வாழ்க்கை முறையின் மூலம் சமூகத்தில் விளையாட்டை கலாச்சாரமாக பிரபலப்படுத்துவது நோக்கமாகக் கொண்ட தேசிய விளையாட்டு தினக் கொண்டாட்டம், (எச்.எஸ்.என்.) மலேசிய மடாணி கோட்பாடு மற்றும் 2030  தேசிய விளையாட்டு தொலைநோக்கு கொள்கைக்கு ஏற்ப நடத்தப்படுகிறது.

விளையாட்டு நடவடிக்கைகளின் முக்கியத்துவம் ஆரம்ப நிலையிலேயே தொடங்க வேண்டும் என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

பள்ளி, உயர்கல்வி நிலையம், வேலை மற்றும் அதற்கு அப்பாலும் விளையாட்டு மீதான ஈடுபாட்டை தொடருங்கள். விளையாட்டின் மூலம் வாழ்க்கை தொடர்ந்து சுறுசுறுப்பாகவும், உடல் செயல்பாடுகள் ஆரோக்கியமாகவும் இருக்கும் என்று அவர் இன்று முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.

பிரதமர் அன்வார் இன்று காலை  புத்ரா ஜெயாவில் தேசிய அளவிலான  2023 ஆம் ஆண்டு  விளையாட்டுத் தினத்தை தொடங்கி வைத்தார். இதில் இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சர் ஹன்னா யோ மற்றும்  துணையமைச்சர் ஆடாம் அட்லி அப்துல் ஹலீம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

எச்.எஸ்.என். என்பது ஒரு தேசிய நிகழ்ச்சி நிரலாகும்,. இது ஆண்டுதோறும் அக்டோபர் மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமையன்று கொண்டாடப்படுகிறது


Pengarang :