MEDIA STATEMENTNATIONAL

டத்தோ ஸ்ரீ அன்வார் சமர்ப்பித்த வரவு செலவு, வரலாற்று பூர்வமான பட்ஜெட்.

செய்தி, சு.சுப்பையா

செமிஞ்சே. அக்.15- ஒட்டு மொத்த பட்ஜெட் ( வரவு செலவு ) 393.8 பில்லியன் ரிங்கிட் . இதில் 5% இந்தியச் சமுதாயத்துக்கு பல்வேறு வகையில் வந்து சேரும். அந்த வகையில் குறைந்தது ரி.ம. 20 பில்லியன் ஆகும். வெறும் ரி.ம. 130 மில்லியன் மட்டும் அல்ல என்று காஜாங் நகராண்மை கழக உறுப்பினர்  சந்திரன் கூறினார்.

இந்தப் பட்ஜெட் சாதனைக்குரிய. மேலும் வரலாற்று பூர்வமானது.,  டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பிரதமரான பிறகு  சமர்ப்பித்த முழுமையான  முதல் வரவு செலவுத் திட்டமாகும். நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கு ஏற்ற வகையில்  பிரதமரும் நிதியமைச்சருமான டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் சமர்ப்பித்துள்ளார்.

இனப் பாகுபாடு காட்டாமல் மலேசியர்கள் அனைவரின் தேவைகளைப் பூர்த்தி செய்யக் கூடிய தரமான பட்ஜெட்டாகும் என்று அவர் வர்ணித்தார்.

இந்த 2024 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்தில் அரசு ஊழியர்களுக்கு அடுத்த ஆண்டு ரி.ம 2,000.00 சிறப்பு உதவித் தொகையாக வழங்கப் படவிருக்கிறது. இத்திட்டத்தின் அரசு ஊழியராக பணியாற்றும் நமது சமுதாயமும் பலன் அடையாத?

அல்லது நாடு முழுவதும் தமிழ்ப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் பயனடைய  மாட்டார்களா ? என்பதை நாம் சீர்தூக்கி  பார்க்க வேண்டும்.

இஸ்லாம் அல்லாத வழிபாட்டுத் தளங்கள் பராமரிப்பு மற்றும் சீரமைப்பு பணிகளுக்கு ரி.ம. 50 மில்லியன் ஒதுக்கப் பட்டுள்ளது.

கல்வி அமைச்சின் மேம் பாட்டுக்கு  ரி.ம. 58 பில்லியன் ஒதுக்கப் பட்டுள்ளது. இந்த ஒதுக்கீட்டின் கீழ், நாட்டில் உள்ள 527 தமிழ் பள்ளிகளும் அடங்கும் என்பதை நாம் உணர வேண்டும்

நாட்டின் வருடாந்திர வரவு செலவு திட்டம் என்பது அனைத்து தரப்பினர்களையும் உள் அடக்கியது. ஒவ்வொரு அமைச்சின் கீழ் ஒதுக்கப்பட்ட நிதியும் அனைவருக்குமானது  என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஆனால்  ஒரு சில விளங்காத பேர்வழிகள் மித்ராவுக்கு , தெக்குனுக்கும்  ஒதுக்கப்பட்டது மட்டுமே இந்தி,களுக்கானது எனக் கூறி இந்தியர்களைக் குழப்பி விட எத்தனிக்கின்றனர்..


Pengarang :