MEDIA STATEMENTNATIONAL

காஸாவில் இதுவரை 9,061 பேர் பலி- 2,060  பேர் இடிபாடுகளில் சிக்கி உள்ளனர்

காஸா நகர், நவ 3- காஸா தீபகற்பத்தில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படையினர் மேற்கொண்டு வரும் தொடர்ச்சியான தாக்குதல்களில் இதுவரை 9,061 பேர் கொல்லப்பட்டுள்ளதாக பாலஸ்தீன வெளியுறவு அமைச்சு நேற்று கூறியது.

இத்தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களில் 3,760 சிறார்கள், 2,326 பெண்கள் மற்றும் 32,000 ஆண்களும் அடங்குவர் என்று அமைச்சின் பேச்சாளர் அஸ்ராப் அல்-குட்ராவை மேற்கோள் காட்டி அடாடோலு செய்தி வெளியிட்டுள்ளது.

காஸா பகுதியில் இடிபாடுகளில் 2,060 பேர் இன்னும் சிக்கியுள்ளனர். இதுதவிர, இந்த தாக்குதல்களில் 135 மருத்துவ அதிகாரிகள் கொல்லப்பட்டதோடு  25 ஆம்புலன்ஸ் வாகனங்களும் முற்றாக சேதமடைந்தன என்று அஸ்ராப் கூறினார்.

கடந்த மாதம் 7ஆம் தேதி இத்தாக்குதல்கள் தொடங்கப்பட்டது முதல் 100 க்கும் மேற்பட்ட மருத்துவ வசதிகளை இலக்காகக் கொண்டு இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது என அவர் தெரிவித்தார்.

இஸ்ரேலின் இடைவிடாத தாக்குதல்கள் காரணமாக 16 மருத்துவமனைகளும் 32  முதன்மை பராமரிப்பு மருத்துவ மையங்களும் செயல்பட முடியாத நிலையில் உள்ளன. மேலும், அங்கு கடுமையான எரிபொருள் பற்றாக்குறையும் நிலவுகிறது என்று அவர் சொன்னார்.

எரிபொருள் பற்றாக்குறைக்கு மத்தியில் மிகப்பெரிய அளவிலான சுகாதாரப் பேரிடர் ஏற்படும் சாத்தியம் உள்ளதையும் அப் பேச்சாளர் சுட்டிக்காட்டினார். காஸாவின் வடக்கே உள்ள இந்தோனேசிய மருத்துவமனை மற்றும் காஸா நகரில் உள்ள அல்-ஷிபா மருத்துவமனை ஆகியவற்றில் உள்ள பிரதான ஜெனரேட்டர்கள் ஏறக்குறைய முடங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன என்றார் அவர்.


Pengarang :