MEDIA STATEMENTNATIONAL

மக்களிடையே நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமை  உணர்வுகள் நிலைத்திருக்க வேண்டும்.

கோம்பாக், 12 நவ: நாம் அனைவரும் நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமையின் உணர்வை பேண வேண்டும், நாடு செம்மையாக  வளர்ந்தெழ சமூகத்தின் எல்லா மட்டங்களிலும்  ஒற்றுமை  உணர்வுகள்  ஆழமாக வேரூன்ற வேண்டும்.

குறிப்பாக சர்வதேச பிரச்சனைகளை எதிர்கொள்ளும் போது  ஒன்றுபட்ட ஆதரவு  நாட்டுக்கு வழங்க வேண்டும்.  உதாரணமாக  பாலஸ்தீன மக்களுக்கு அமைதி மற்றும் செழுமைக்கான செய்தியைக் கொண்டு வருவதற்கான  பிரதமரின் முயற்சிகளுக்கு அனைத்து கட்சிகளும் ஆதரவளிக்க வேண்டும் என்று டத்தோ மந்திரி புசார்  டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கேட்டுக்கொண்டார்..

“மாண்புமிகு டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இந்தப் பிரச்சினையை குறுகிய தனிப்பட்ட அரசியல் நலன்களுக்காகப் பயன் படுத்தவில்லை. சர்வதேச பிரச்சினைகளை எதிர்கொள்ளும் போது நாம் ஒற்றுமை உணர்வை பேண முடியும் என்று நான் நம்புகிறேன்  என அங்கு  வந்திருந்த ஊடகளாலர்களிடம்  தெரிவித்தார்.,

ஆனால் உள்நாட்டு பிரச்சனைகளை எதிர்கொள்ளும் போது  ஒவ்வொருவருக்கும் அவர்களின்  சொந்த கண்ணோட்டம்  இருக்கும் என்பதை நாங்கள் புரிந்து கொள்கிறோம்,” என்று அவர்  கூறினார்.

முன்னதாக, தீபாவளி கொண்டாட்டத்தில் இணைந்து அமிருதின் மற்றும் அவரது மனைவி டத்தின்  ஸ்ரீ மஸ்தியானா முகமது ஆகியோர் இன்று கோம்பாக் நாடாளுமன்ற  தொகுதியைச் சுற்றியுள்ள இந்திய சமூகத்தினருக்கு  தீபாவளி  வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்வதில்   நேரத்தை செலவிட்டனர்.

சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தனது மனைவி டத்தின் ஸ்ரீ மஸ்தியானா முகமதுவுடன் கோம்பாக்கிலுள்ள  கம்போங் வீரா டாமாய்  தீபாவளி கொண்டாட்ட  திறந்த இல்லத்திற்கு உபசரிப்புக்கு  அழைத்ததற்காக புரவலருக்கு நன்றி தெரிவித்ததோடு, இன்று பல்வேறு இனங்களின் நல்லிணக்க உணர்வை பாராட்டினார்.

“ஒவ்வொரு வருடமும் இந்திய சமூகத்தின் நண்பர்கள் வீடுகளுக்கு சென்று தீபாவளியை ஒன்றாகக் கொண்டாடுவது  என்பது வழக்கமாக இருந்து வந்துள்ளது..  நாங்கள் மிகவும் நல்ல உபசரிப்பை  பெற்றோம், நாங்கள் வெவ்வேறு இனங்கள் மற்றும் கலாச்சாரங்களை சேர்ந்தவர்களாக இருந்தாலும் எங்களிடையே  உறவை வலுப்படுத்த இது ஒரு வாய்ப்பாகும்,” என்று அவர் கூறினார்.

இதற்கிடையில், மலேசிய இந்திய காங்கிரஸ் கோம்பாக் தலைவர்  கே. கோபிராஜை சந்தித்தபோது, டத்தோ மந்திரி புசார் இன்று முதல் முறையாக அவரது இல்லத்திற்கு வந்திருப்பது குறித்து மகிழ்ச்சி அடைவதாக கூறினார்.இது  தங்களுக்கு கிடைத்த கவுரவம்,” என்றார்.

இதற்கிடையில், ஒரு கட்சி ஆர்வலரான எஸ் விநாயகர் அமிருடின்  உடனான தனது உறவை சகோதர சகோதரிகளுக்கு  இடையிலான உறவை  போன்ற கருதுவதாக கூறினார். அமிருடின்  மக்கள் நலனில் அக்கறை கொண்ட  நல்ல தலைவர் எப்போதும் மக்கள் மீதான அவரின் பரிவான  அணுகுமுறை  தன்னை  கவர்ந்ததாக கூறி பாராட்டுகிறார்.

“கடந்த ஏழு வருடங்களாக ஒவ்வொரு முறை தீபாவளி பண்டிகைக்கும் மாண்புமிகு  எங்கள் வீட்டிற்கு வரத்தவறியதில்லை. “ஒரு குடும்பமாக நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம், அவருடனான எங்கள் உறவு சகோதர சகோதரிகளைப் போல மிகவும் நெருக்கமாக உள்ளது.

இன்று  தீபாவளிக்கு  சிறப்பாக தோசை, நண்டு கறி உள்ளிட்ட பல்வேறு  உணவுகளை தயார் செய்துள்ளதாக  கூறினார்.


Pengarang :