MEDIA STATEMENTNATIONAL

அமைச்சர் சிவகுமார் தலைமையில்  ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் bகார்த்திகை தீப விழா

பெட்டாலிங் ஜெயா, நவ 27- ஒவ்வொரு ஆண்டும் தீபாவளியை அடுத்து உலகில் உள்ள இந்து பெருமக்களால் கொண்டாடப்படும் ஒரு பண்டிகைதான் கார்த்திகை தீபம்.  இந்த கார்த்திகை தீபம் கார்த்திகை மாதத்தில் கார்த்திகை நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது.

இந்த ஆண்டின் கார்த்திகை தீபம் இன்று நவம்பர் 26 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் ஏற்பாட்டில் கார்த்திகை தீப விழா இன்று மிகவும் விமரிசையாக நடைபெற்றது.

மனிதவள அமைச்சர் வ. சிவகுமார் மற்றும் ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் தலைமை நிர்வாக இயக்குனர் டான்ஸ்ரீ டாக்டர் எம் தம்பிராஜா ஆகியோர் கார்த்திகை தீபத்தை ஏற்றி வைத்து விழாவை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்கள். கார்த்திகை மாதமானது முருகப்பெருமான் பிறந்த மாதம் என்பதால், இந்த மாதம் இன்னமும் சிறப்பு வாய்ந்த மாதமாக கருதப்படுகிறது.

ஸ்ரீ முருகன் மையத்தால் பக்தியுடனும் உற்சாகத்துடனும் ஏற்பாடு செய்யப்பட்ட கார்த்திகை தீப விழாவில் பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் அதிக அளவில் கலந்து கொண்டனர்.

அர்ப்பணிக்கப்பட்ட தெய்வீக விழாவைக் குறிக்கும் இந்த நிகழ்வு நம் இதயங்களில் சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது என்று ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் தலைமை நிர்வாக இயக்குனர் டான்ஸ்ரீ டாக்டர் எம் தம்பிராஜா குறிப்பிட்டார்.

முருகன், வீரம், ஞானம், கருணை ஆகியவற்றின் உருவகம். அக்னி கார்த்திகை, ஒரு திருவிழா   இந்திய சமூகத்திற்கு பெரும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று அவர் சொன்னார்.

இந்த கார்த்திகை தீப திருவிழா இறைவனின் வெற்றியை நினைவுபடுத்துகிறது என்று மனிதவள அமைச்சர் வ சிவகுமார் தெரிவித்தார்.  முருகனின் போதனைகள் ஒற்றுமையில் இருக்கும் வலிமையை நமக்கு நினைவூட்டுகிறது.

அந்த வகையில் ஸ்ரீ முருகன் மையத்தின் மூலம் இந்திய சமூகத்தை உயர்த்துவதற்கான அர்ப்பணிப்புக்கு நான் அவர்களைப் பெரிதும் பாராட்டுகிறேன்

அக்னி கார்த்திகை தீபம் நம் இதயங்களையும், மனங்களையும், வீடுகளையும் ஒளிரச் செய்து, அமைதியைக் கொண்டு வருகிறது என்று அமைச்சர் சிவகுமார் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் துணை நிர்வாக இயக்குனர் சுரேந்திரன், டேலாண்ட் கோர்ப் தலைமை செயல் முறை அதிகாரி மேத்தியூஸ் தோமஸ், டத்தோ டாக்டர் புவரியப்பன், டத்தோ டாக்டர் ஏ.டி. குமரராஜா, பைனாரி பல்கலைக்கழகத்தின் உரிமையாளர் டான்ஸ்ரீ ஜோசப் அடைக்கலம்,  தேசிய தமிழ்ப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மன்றத்தின் தலைவர் எஸ்.எஸ். பாண்டியன் , டத்தோ சிவம் உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Pengarang :