ECONOMYMEDIA STATEMENTNATIONAL

வானிலை மேம்பாட்டால் கிளந்தானில் வெள்ள அகதிகள் எண்ணிக்கை குறைகிறது

கோத்தா பாரு, டிசம்பர் 7: பாசீர் மாஸ் மாவட்டத்தில்  நாள் முழுவதும் நல்ல வானிலை மற்றும் மழை இல்லாததால் நேற்று காலை 989 குடும்பங்களைச் சேர்ந்த 3,260 பேருடன் ஒப்பிடும்போது, நேற்று  இரவு 8 மணி நிலவரப்படி 756 குடும்பங்களைச் சேர்ந்த 2,338 பேராக குறைந்துள்ளது.

சமூக நலத்துறையின் (ஜேகேஎம்) பேரிடர் தகவல் போர்டல் படி, பாதிக்கப்பட்ட அனைவரும் மாவட்டத்தில்   உள்ள ஒன்பது தற்காலிக தங்குமிடங்கள் (பிபிஎஸ்) வைக்கப்பட்டுள்ளனர்.

பி.பி.எஸ் செகோல கெபங்சாஹன் (எஸ்.கே) குஅல் திங்கியில் (PPS Sekolah Kebangsaan (SK) Gual Tinggi) தற்போது 14 குடும்பங்களைச் சேர்ந்த 92 பேர் உள்ளனர், எஸ்.கே (SK Gual To’Deh) (245 குடும்பங்களைச் சேர்ந்த 748 பேர்) மற்றும் செகோல மெனங்கஹ கெபங்சாஹன் (எஸ்.எம்.கே) (Sekolah Menengah Kebangsaan (SMK) Gual Periok) (41 குடும்பங்களைச் சேர்ந்த 153 பேர்).

பி.பி.எஸ் எஸ்.எம்.கே (PPS SMK Baroh Pial) 140 குடும்பங்களைச் சேர்ந்த 371 பேர், எஸ்.கே கிடாய் டான் ஜோங் (13 குடும்பங்களைச் சேர்ந்த 48 பேர்) மற்றும் எஸ்.கே குவால் பெரியோக் (74 குடும்பங்களைச் சேர்ந்த 252 பேர்) ஆகியோர் தங்க வைக்கப்பட்டனர்.

மேலும் மூன்று பி.பி.எஸ், அதாவது மதரஸா தாசெக் பகோங் (10 குடும்பங்களைச் சேர்ந்த 33 பேர்), முகிம் பத்தாங் லிசின் மசூதி (119 குடும்பங்களைச் சேர்ந்த 320 பேர்) மற்றும் எஸ்கே ஸ்ரீ கியாம்பாங் (100 குடும்பங்களைச் சேர்ந்த 321 பேர்) தங்கி உள்ளனர்.

– பெர்னாமா


Pengarang :