ECONOMYMEDIA STATEMENTNATIONAL

மலேசியா 10 ஆண்டுகளில் ஆக உயர்ந்த 22,500 கோடி முதலீட்டை இப்பொழுது பதிவுசெய்துள்ளது –

கோலாலம்பூர், 7 டிச: இவ்வாண்டு ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான காலக்கட்டத்தில் முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் (எம்ஐடிஐ) அங்கீகரித்த மொத்த முதலீட்டு மதிப்பு RM 22,500 கோடி ஆகும். இது  கடந்த பத்து ஆண்டுகளில் மலேசியாவின் மிக உயர்ந்த மற்றும் சிறந்த சாதனைகளில் ஒன்றாகும்.

இந்த சாதனை மலேசியாவின் தொடர்ச்சியான கவர்ச்சியையும், முதலீட்டாளர்களின் நம்பிக்கையையும் முதலீட்டுத் தளமாக நிரூபித்துள்ளது என்று அமைச்சர் துங்கு டத்தோஸ்ரீ ஜஃப்ருல் அப்துல் அஜீஸ் கூறினார்.

அந்நிய நேரடி முதலீடு (FDI) மற்றும் உள்நாட்டு நேரடி முதலீடு (DDI) விகிதம் ஏறக்குறைய அதே எண்ணிக்கையை பதிவு செய்துள்ளது, இது இந்த ஆண்டின் ஒன்பது மாதங்களில் FDI க்கு 56 சதவிகிதம் மற்றும் DDI க்கு 44 சதவிகிதம் ஆகும்என்று அவர் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்

இந்த ஆண்டு அரசாங்க முதலீட்டு பயணங்களின்  வழி  பெறபட்ட  மொத்த முதலீட்டு மதிப்பு RM34700 கோடி  ஆகும்

அவை,   சீனா RM17000 கோடி  ;    யுனைடெட் ஸ்டேட்ஸ் (APEC) (RM6300 கோடி);

அபுதாபி (RM4060 கோடி );     தென் கொரியா (RM2400கோடி ); ஜப்பான் (RM2310கோடி); 

சிங்கப்பூர் (RM1300  கோடி );  புருனை (RM500 கோடி);  அமெரிக்கா (UNGA) (RM474 கோடி); இத்தாலி (RM330 கோடி);  இந்தோனேசியா (RM30 கோடி);  மற்றும் வியட்நாம் (RM0.5 கோடி) க்கான  வாக்குறுதிகள் பெறபட்டன.  

 

பெர்னாமா


Pengarang :