ECONOMYMEDIA STATEMENTNATIONAL

கிறிஸ்தவ சமூகத்தினருக்கு  பிரதமரின் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்

கோலாலம்பூர், டிச.24 – பொருளாதாரம், முதலீடு மற்றும் வறுமையை ஒழித்தல் ஆகிய அம்சங்களில் நாடு தொடர்ந்து வளர்ச்சி அடைய, நாட்டு மக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தனது கிறிஸ்துமஸ்  வாழ்த்து செய்தியில் கேட்டுக்கொண்டார்.

ஒருவருக்கொருவர் அன்பு, கருணை, புரிதல் மற்றும் கருணை ஆகியவற்றை வெளிப்படுத்தவும், இனம்,  மதம்  மற்றும் பின்னணியைப் பொருட்படுத்தாமல் பல்வேறு சமூகத்தினரிடையே நல்லெண்ணத்தைப் பரப்ப  இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் தினக் கொண்டாட்டம்  ஒரு உத்வேகமாக அமைய வேண்டும்  என்று பிரதமர் பேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளார்.

“நாட்டிலுள்ள அனைத்து கிறிஸ்தவர்களுக்கும் இனிய கிறிஸ்துமஸ் தின வாழ்த்துகள். கிறிஸ்தவ சமூகம் ஒவ்வொரு ஆண்டும் தங்கள் அன்புக்குரியவர்கள், குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன்  மகிழ்வுடன்  கொண்டாடும்  பண்டிகை ” கிறிஸ்துமஸ்” இது  ஒரு நல்ல நாள்.

“இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் அனைத்து மலேசியர்களிடையே மகிழ்ச்சி, அமைதி, நல்லிணக்கம், செழிப்பு மற்றும் ஒற்றுமையைக் கொண்டு வரட்டும்” என்று அவர் தனது 2023 கிறிஸ்துமஸ் தின வாழ்த்துக்களில் கூறினார்.

உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவ சமூகத்தால் ஆண்டுதோறும் டிசம்பர் 25 அன்று கிறிஸ்துமஸ் கொண்டாடப்படுகிறது.
– பெர்னாமா


Pengarang :