MEDIA STATEMENTNATIONAL

தலைநகரின் பழைமை வாய்ந்த தேவாயத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் வழிபாட்டில் 2,000 பேர் பங்கேற்பு

கோலாலம்பூர், டிச 25- கிறிஸ்துமஸ் தினத்தைக் முன்னிட்டு  நேற்றிரவு இங்குள்ள கேதட்ரல் சென்ட். ஜோன் தேவாலயத்தில் நேற்றிரவு நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் 2,000க்கும் மேற்பட்டோர்  கலந்து கொண்டனர்.

ஏசு பிரானின் பிறந்தநாளை முன்னிட்டு நடத்தப்பட்ட சிறப்பு பிரார்த்தனை நிகழ்வில் கலந்து கொள்வதற்காக நேற்று மாலை 6.30 மணி முதல் மக்கள்  தேவாலயத்திற்கு வரத் தொடங்கியதாக பாதிரியார் ஜெரார்டு ஸ்டீவ் திரவியம் கூறினார்.

சிறார்கள் மற்றும் பெற்றோர்களுக்கான சிறப்பு வழிபாட்டை இரவு 7.00 மணிக்கு முடித்தோம். பெரியவர்களுக்கான பிரதான வழிபாடு இரவு 9.00 மணிக்கும் மூன்றாம் வழிபாடு இரவு 11.00 மணிக்கும் நடத்தப்பட்டது என்றார் அவர்.

காஸாவில் நிகழ்ந்து வரும் போரில் பாதிக்கப்பட்ட பாலஸ்தீனர்கள் படும் இன்னல்களை கருத்தில் கொள்ளுமாறு வழிபாட்டில் கலந்து கொண்டவர்களுக்கு நினைவுறுத்தப்பட்டது என்றும் அவர் குறிப்பட்டார்.

இதனிடையே, 68 ஆண்டுகால பழைமை வாய்ந்த இந்த தேவாலயத்தில் நடைபெறும் கிறிஸ்துமஸ் வழிபாட்டில் கலந்து கொள்வதற்காக தாம் குடும்பத்தினருடன் தெலுக் இந்தானிலிருந்து வந்ததாக டிக்சன் லியு (வயது 19) கூறினார்.

கடந்த பிப்ரவரி மாதம் முதல் மூடப்பட்டிருந்த இந்த  தேவாலயம் மீண்டும் திறக்கப்பட்டது குறித்து தாம் பெரிதும் மகிழ்ச்சியடைவதாக எலிஸ் டான் (வயது 37) சொன்னார்.

ஒவ்வோரண்டும் டிசம்பர் மாதம் 25ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்துவர்கள் கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாடுகின்றனர்.


Pengarang :