MEDIA STATEMENTNATIONAL

கால்பந்து விளையாட்டில் கைகலப்பு- மூவர் கைது

கோல திரங்கானு, ஜன 14 – கடந்த வெள்ளிக்கிழமை கோல நெருஸ், கோங் பாடாக்கில் உள்ள திரங்கானு மாநில விளையாட்டு வளாகத்தில்  நாக் எஃப்.சி.  மற்றும்  கெசா எஃப்.சி.  அணிகளுக்கு இடையிலான கால்பந்து போட்டியின் போது கைகலப்பில்  ஈடுபட்டதாகக் கூறப்படும் மூவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில்  20 முதல் 40 வயதுடைய அதிகாரிகள் மற்றும் வீரர்களும் அடங்குவர் என்று  திரங்கானு மாநில காவல்துறைத் தலைவர் டத்தோ மஸ்லி மானான் தெரிவித்தார்.

ஒரு நபர் பலத்த காயங்களுக்கு உள்ளாவதற்கு காரணமான இந்த கைகலப்பு  தொடர்பான விசாரணைக்கு உதவுவதற்காக மூன்று அந்த சந்தேக நபர்களும் நேற்று கைது செய்யப்பட்டனர் என அவர் தெரிவித்தார்.

இந்த மோதல் தொடர்பில்  மேலும் பலர் கைது செய்யப்படுவார்கள்.இச்சம்பவம் தொடர்பில்   தண்டனைச் சட்டத்தின்  147வது பிரிவின் கீழ்  விசாரிக்கப்படுகிறது என்றார் அவர்.

இன்று இங்குநடைபெற்ற  திரங்கானு போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறையின் சொத்து ஒப்படைப்பு விழாவிற்கு தலைமையேற்றப் பிறகு செய்தியாளர் கூட்டத்தில் அவர் இதனைக் கூறினார்.

வெள்ளிக்கிழமை, நாக் எஃப்.சி. மற்றும் கெசா எஃப்.சி. குழுக்களுக்கிடையிலான கால்பந்தாட்டத்தின் போது ஏற்பட்ட கைகலப்பை சித்தரிக்கும்  இரண்டு நிமிடம்  42 வினாடி  வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது.

நடுவரின் பாரபட்சமான போக்கினால்    அணிகளுக்கு இடையே ஏற்பட்ட அதிருப்தி காரணமாக இந்த சம்பவம் நடந்ததாக நம்பப்படுகிறது


Pengarang :