ACTIVITIES AND ADSALAM SEKITAR & CUACANATIONAL

வெள்ளம் காரணமாக எட்டு நிவாரண மையங்களில் 455 பேர் தஞ்சம்

கோலாலம்பூர், ஜன 16- வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மூன்று மாநிலங்களில் உள்ள எட்டு தற்காலிக நிவாரண மையங்களில் இன்று அதிகாலை 6.00 மணி நிலவரப்படி 455 பேர் அடைக்கலம் நாடியுள்ளனர்.

சபா மாநிலத்தின் சண்டகானில் திறக்கப்பட்டுள்ள ஒரு துயர் துடைப்பு மையத்தில் 161 பேரும் பெலுரானில் உள்ள மூன்று மையங்களில் 113 பேரும் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனத்தித்ன (நட்மா) தேசிய பேரிடர் கட்டுபாட்டு மையத்தின் சமீபத்திய அறிக்கை கூறியது.

பகாங் மாநிலத்தைப் பொறுத்த வரை வெள்ள நிலைமையில் மாற்றமில்லை. ரொம்பினில் உள்ள ஒரு நிவாரண மையத்தில் 34 குடும்பங்களைச் சேர்ந்த 103 பேர் தங்கியுள்ளனர். ஜோகூர் மாநிலத்தின் சிகாமாட்டில் உள்ள இரு மையங்களில் 63 பேரும் பத்து பகாட்டில் உள்ள 15 பேரும் அடைக்கலம் நாடியுள்ளனர்.

சரவா மாநிலத்தின் கூச்சிங்கில் தீவிபத்தில் பாதிக்கப்பட்ட 12 குடும்பங்களைச் சேர்ந்த 38 பேர் நிவாரண மையத்தில் இன்னும் தங்கியுள்ளனர்.

ஜோகூர் மற்றும் பகாங்கிலுள்ள சில ஆறுகளில் நீர் மட்டம் அபாயக் கட்டத்தில் உள்ளதை வடிகால் மற்றும் நீர் பாசனத் துறையின் டெலிமெட்ரி கண்காணிப்பு மையம் கண்டறிந்துள்ளது.

இதனிடையே. வெள்ளம், நிலச்சரிவு மற்றும் பாலம் உடை.ந்தது போன்ற காரணங்களால் நாடு முழுவதும் உள்ள 43 சாலைகள் போக்குவரத்துக்கு மூடப்பட்டுள்ளன.


Pengarang :