SELANGOR

தாமான் ஸ்ரீ மூடாவில் வடிகால் அமைப்பை மேம்படுத்தும் பணி 90 சதவீத முன்னேற்றத்தை எட்டியுள்ளது

ஷா ஆலம், ஜன.17: தாமான் ஸ்ரீ மூடாவில் வடிகால் அமைப்பை மேம்படுத்தும் பணி 90 சதவீத முன்னேற்றத்தை எட்டியுள்ளதால், தற்போது அப்பகுதியில் ஏற்பட்டுள்ள  திடீர் வெள்ளத்தை கட்டுப்படுத்துவதில் சாதகமான நிலை ஏற்பட்டுள்ளது.

புதிய வடிகால் கட்டுமானம் மற்றும் வடிகால் சுத்திகரிப்பு திட்டத்தின் முன்னேற்றத்தைத் தனது தரப்பு தொடர்ந்து கண்காணித்து வருவதாக கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் எஸ் பிரகாஷ் கூறினார். இப்பணி ஜனவரி 24 ஆம் தேதி முழுமையாக நிறைவடையும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

“சில பகுதிகளில் திடீர் வெள்ளம் ஏற்பட்டதாக எங்களுக்கு மேலும் புகார்கள் வந்தாலும், கனமழையின் போது நீரோட்டத்தை எளிதாக்குவதற்கு லோட் 1325, ஜாலான் பத்து லாப்பனில் உள்ள தாழ்வான பகுதியைச் சுத்தம் செய்வதன் மூலம் குறுகிய கால தீர்வுகள் உட்பட முயற்சிகளை மேம்படுத்த வேண்டும்.

“வீடு எப்போதும் சுத்தமாக இருப்பதை உறுதிசெய்து, திடீர் வெள்ளத்தைத் தவிர்க்க ஒன்றாக இணைந்து வேலை செய்ய குடியிருப்பாளர்களை நான் கேட்டுக் கொள்கிறேன்,” என்று அவரைத் தொடர்பு கொண்டபோது கூறினார்.

குடியிருப்புப் பகுதிகளை எப்போதும் தூய்மையாக வைத்திருக்குமாறு சுற்றுவட்டார குடியிருப்பாளர்களைப் பிரகாஷ் கேட்டுக் கொண்டார்.

டிசம்பர் 11 அன்று, சம்பந்தப்பட்ட பகுதியில் ஏற்பட்ட வெள்ளப் பிரச்சனையைச் சமாளிக்கும் நோக்கத்துடன், ஜூலை 2021 முதல் தாமான் ஸ்ரீ மூடாவில் 6.8 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான வடிகால் அமைப்பை மேம்படுத்தும் பணி தொடங்கப் பட்டதாகத் தெரிவித்தார்.

திட்டத்தின் முக்கிய நோக்கம் தடுப்பு பாதுகாப்பு, திருகு பம்புகளை நிறுவுதல், குவாட்டர்ஸ் கட்டுமானம், ‘காம்பாக்ட் சப்’ மற்றும் மின் பொருட்களை உள்ளடக்கியது.


Pengarang :