ஷா ஆலம், ஜன 23: சீனப் புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு 384 இடங்களில் பெரிய ‘ரோல் ஆன் ரோல் ஆஃப்’ (ரோரோ) தொட்டிகளை வைக்க ஷா ஆலம் மாநகராட்சி (எம்பிஎஸ்ஏ) ஏற்பாடு செய்துள்ளது.

நேற்று முதல் பிப்ரவரி 5 வரை மொத்த குப்பை சேகரிப்புக்காகத் ரோரோ தொட்டியை வைப்பதாக உள்ளாட்சி அமைப்பு (பிபிடி) முகநூல் மூலம் அறிவித்தது.

“சீன புத்தாண்டை முன்னிட்டு 384 இடங்களில் மூன்று முதல் ஐந்து நாட்களுக்கு ரோரோ தொட்டிகள் KDEB கழிவு மேலாண்மை மூலம் வைக்கப்படும் மற்றும் குப்பைகள் நிரம்பினால் அகற்றப்படும்” என்று எம்பிஎஸ்ஏ தெரிவித்துள்ளது.

திடக்கழிவு சேகரிப்பு மூன்று சுற்றுகளாக மேற்கொள்ளப்படும். அவை ஜனவரி 22 முதல் 26 வரை, ஜனவரி 27 முதல் 31 வரை மற்றும் பிப்ரவரி 1 முதல் 5 வரை ஆகும்.

அனுமதிக்கப்பட்ட கழிவுகளில் பயன்படுத்தப்பட்ட தளவாடப் பொருட்கள் அடங்கும். அதே நேரத்தில் மின்னணுவியல் கழிவு மற்றும் மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்கள் அருகிலுள்ள மறுசுழற்சி மையத்திற்கு அனுப்பலாம்.

ரோரோ தொட்டிகள் வைக்கப்பட்டிருக்கும் இடங்களின் முழுப் பட்டியலையும் எம்பிஎஸ்ஏ திடக்கழிவு முகநூலில் சரிபார்க்கலாம். அதுமட்டுமில்லாமல், எம்பிஎஸ்ஏ பொது நிலைத்தன்மை மற்றும் கழிவுத் துறை அல்லது KDEBWM ஐத் தொடர்புகொள்ளலாம்.