MEDIA STATEMENTNATIONAL

செலாயாங் நகராண்மை மன்றத்தில்  நால்வர் இந்தியர்கள்

செய்தி . சு.சுப்பையா

செலாயாங்.ஜன.23-   சிலாங்கூரில் உள்ள எல்லா நகராண்மை கழகம் மற்றும் மா நகர் மன்றங்களில் 2024 முதல் 2025 ஆம் ஆண்டுக்கான உறுப்பினர்கள் பதவி பிராமணம் நடை பெற்றுக் கொண்டிருக்கிறது. கடந்த 18 தேதியன்று செலாயாங் நகராண்மை கழக உறுப்பினர்கள் அதன் தலைவர் டத்தோ முகமட் யாசிட் பின் சாரி முன்னிலையில் பதவி பிரமாணம் எடுத்துக் கொண்டனர். இம்முறை இந்தியர்கள்  நால்வர் மீண்டும் செலாயாங் நகராண்மை கழக உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

மக்கள் நீதிக் கட்சியின் சார்பில் இருவரும், ஜ.செ.க மற்றும் அமனா கட்சிகளின் சார்பில் தலா ஒருவரும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந் நால்வரில் மூவர் ஆண்கள் ஒருவர் மகளிர் ஆவார்.

மக்கள் நீதிக் கட்சியின் சார்பில் துவான் தேவந்திரன் மற்றும் துவான் ஏண்டி என்ற அன்முனியாண்டி நியமிக்கப் பட்டுள்ளனர். அமனா கட்சியின் சார்பில் துவான் பாலா என்ற தனபால் நியமிக்கப் பட்டுள்ளார். ஜ.செ.க.வின் சார்பில் புவான் மாரியம்மாள் நியமிக்கப் பட்டுள்ளார்.

அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு இந்நால்வரும் செலாயாங் நகராண்மை கழகத்தில் உறுப்பினர்களாக சேவையாற்றுவார்கள். தங்களது பகுதிகளில் உள்ள நகராண்மை கழக பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வேளையில் இங்குள்ள இந்தியர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்கும் தீர்வு காண்பார்கள்.


Pengarang :