ECONOMYMEDIA STATEMENTNATIONAL

தெலுக் டத்தோ அருள்மிகு சுப்பிரமணியர் ஆலய தைப்பூச விழாவில் பாப்பாராய்டு பங்கேற்பு

பந்திங், ஜன 28- இங்குள்ள தெலுக் டத்தோ அருள்மிகு சுப்பிரமணியர் ஆலயத்தின் 122ஆம் ஆண்டு தைப்பூச விழா கடந்த வியாழக்கிழமை வெகு விமரிசையாக நடைபெற்றது. 

இந்த விழாவில் பந்திங் சட்டமன்ற உறுப்பினரும் மனித வளம் மற்றும் வறுமை ஒழிப்புத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினருமான வீ.பாப்பராய்டு தன் துணைவியார் திருமதி மகேஸ்வரியுடன் கலந்து சிறப்பித்தார்.

இந்த தைப்பூச நிகழ்வில் உரையாற்றிய பாப்பாராய்டு, இந்நாட்டிலுள்ள பல இன, சமய மக்கள் தங்கள் விழாக்களை கொண்டாடுவதற்கு அரசாங்கம் வழங்கியுள்ள சுதந்திரத்தை நாம் முறையாக பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். 

இந்துக்களின் பிரதான சமய விழாக்களில் ஒன்றான தைப்பூசம் சமய நெறிகளுக்கு உட்பட்டும் பிற இனத்தினர் மதிக்கும் வகையிலும் கொண்டாடப்படுவது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

ஆலயத் தலைவர் ப.அழகுமலை தலைமையிலான நிர்வாகக் குழுவினர் மிகவும் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்திருந்த இந்த தைப்பூச விழாவில் சுமார் 2,000 பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் கோல லங்காட் நகராண்மைக் கழக உறுப்பினர் நடேசன், இந்திய கிராமத் தலைவர் மு.அன்பழகன் உள்ளிட்ட பிரமுகர்களும் கலந்து கொண்டனர்


Pengarang :