ECONOMYMEDIA STATEMENTNATIONAL

பொதுச் சேவை ஊழியர்கள் ஓய்வூதிய விவகாரம்- அரசுடன் தொடர்ந்து விவாதிக்க  கியூபெக்ஸ் நம்பிக்கை

கோல நெருஸ், ஜன 28- நிரந்தரமாக பணியமர்த்தப்படும் ஊழியர்களுக்கு ஓய்வூதியம் இல்லாத திட்டத்தை அமல்படுத்துவதற்கு முன்னர் இவ்விவகாரம் தொடர்பில் அரசாங்கத்துடன் பேச்சு நடத்துவதற்கான வாய்ப்பு இன்னும் உள்ளது என தாங்கள் நம்புவதாக கியூபெக்ஸ் எனப்படும் அரசு ஊழியர்கள் தொழிற்சங்கம் கூறுகிறது.

தற்போதுள்ள சம்பள விகிதாசாரத்தில் முதிய வயதில் வாழ்க்கையை நடத்துவதற்கு நடப்பிலுள்ள ஓய்வூதிய முறை மிகவும் பொருத்தமானதாக விளங்குகிறது என்று கியூபெக்ஸ் கருதுவதாக அதன் தலைவர் டத்தோ அட்னான் மாட் கூறினார்.

பொதுச்சேவைத் துறை ஊழியர்களுக்கான சம்பள முறையில் ஓய்வூயத்தை அகற்றுவது உள்ளிட்ட மாற்றங்களைச் செய்ய அரசாங்கம் உத்தேசிக்கும் பட்சத்தில் ஊழியர்களின் சம்பளத்தை அரசாங்கம் உயர்த்த வேண்டும். இதன் வாயிலாக மட்டுமே வயதான காலத்தில் பயன்படுத்துதற்கு ஏதுவாக நாங்கள் ஊழியர் சேம நிதி வாரியத்தில் (இ.பி.எப்.) சந்தா செலுத்த முடியும் என அவர் தெரிவித்தார்.

நேற்றிரவு இங்கு நடைபெற்ற கிழக்கு மண்டலத்திற்கான கியூபெக்ஸ் தலைவருடனான ஒருமைப்பாட்டு நிகழ்வில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைக் கூறினார்.

தற்போது அரசாங்கம் ஊழியர்கள் பெறும் சம்பளம் “வாய்க்கும் வயிற்றுக்கும் போதுமானதாக“ மட்டுமே உள்ளது. இதன் காரணமாக பல அரசு ஊழியர்களா சொந்த வீட்டைக்கூட வாங்க முயவில்லை. ஓய்வு பெற்றப் பின்னர் வாழ்க்கையை நடத்த அவர்களுக்கு இந்த ஓய்வூதிய முறை துணை புரிகிறது என்றார் அவர்.

ஓய்வூதியத் திட்டத்தை அகற்றும் நடவடிக்கை எதிர்காலத்தில் பொதுச் சேவைத் துறையில் ஒரு தொய்வினை ஏற்படுத்தும் என்ற அச்சமும் ஏற்படுகிறது என்று அவர் குறிப்பிட்டார்.


Pengarang :