SELANGOR

பாதிக்கப்பட்ட தொழில்முனைவோரின் கடன் தவணை முறையை  மறுசீரமைக்க ஹிஜ்ரா உதவி

ஷா ஆலம்,  பிப் 13 –  நிதி நெருக்கடியை எதிர்நோக்கும் உறுப்பினர்களுக்கு   நிதி மீட்சித் திட்டத்தை யாயாசான் ஹிஜ்ரா சிலாங்கூர் (ஹிஜ்ரா) அறவாரியம் வழங்குகிறது.

சம்பந்தப்பட்ட தொழில்முனைவோர் அருகிலுள்ள ஹிஜ்ரா அலுவலகக் கிளையில் மாதாந்திர கடன் தவணைகளை மறுபரிசீலனை செய்யக் கோரலாம் என்று அந்த அறவாரியம்  தெரிவித்தது.

கடனைத்  திருப்பிச் செலுத்தும் அட்டவணையை மறுசீரமைப்பதற்கு ஏதுவாக  நிதி மீட்புத் திட்டத்துடன் உங்களுக்கு உதவ நாங்கள் தயாராக இருக்கிறோம்.

மேலும் தகவலுக்கு மாநிலம் முழுவதும் உள்ள  18  ஹிஜ்ரா சிலாங்கூர் கிளைகளின் கடன் வசூலிப்பு அதிகாரியைத் தொடர்பு கொள்ளவும் என்று அது தனது பேஸ்புக் பதிவில் கூறியது.

யாயாசான் ஹிஜ்ரா உறுப்பினர்கள் தங்கள் கடன் பாக்கியை  http://mikrokredit.selangor.gov.my/ என்ற இணைப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம் அல்லது https://www.hijrahselangor.com/risalah-skim-hijrah…/ என்ற இணைப்பை அழுத்தி ஹிஜ்ரா சிலாங்கூர் கடன் தொடர்பான மாதிரி வழிகாட்டி பிரசுரத்தைப் பதிவிறக்கம் செய்யலாம்.

கடந்த 2015ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த ஹிஜ்ரா அறவாரியம் சிறிய அளவில் வர்த்தகத்தைத் தொடங்க விரும்புவோர் மற்றும் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்வோருக்கு மூலதனக் கடனுதவியை வழங்குகிறது.

இந்த ஹிஜ்ரா அறவாரியம் ஐ- பிஸினஸ், நியாகா டாருள் ஏஹ்சான் (நாடி), ஸ்கிம் கோ டிஜிட்டல், ஜீரோ டு ஹீரோ ஆகிய கடனுதவித் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

கடந்த 2015ஆம் ஆண்டு முதல் இன்னும் திரும்பப் பெறாமலிருக்கும் 10 கோடி வெள்ளி கடன் தொகையை வசூலிப்பதில் தாங்கள் தீவிரமாக ஈடுபடவுள்ளதாக ஹிஜ்ராவின் தலைமைச் செயல்முறை அதிகாரி டத்தோ மேரியா ஹம்சா கடந்த ஜனவரி 11ஆம் தேதி கூறியிருந்தார்.

இந்த தொகை 16,000 கடனாளிகளின் கணக்குகளை உட்படுத்தியுள்ளதாகக் கூறிய அவர்,  புதியவர்களுக்கு கடன் வழங்குவதற்கு ஏதுவாக அக்கடன்களைத் திரும்ப வசூலிக்க வேண்டியுள்ளது என்றார்.


Pengarang :