ACTIVITIES AND ADSMEDIA STATEMENTNATIONAL

கோத்தா கெமுனிங் தொகுதி ஏற்பாட்டில் இலவச சட்ட ஆலோசக உதவி

ஷா ஆலம், பிப் 14- கோத்தா கெமுனிங் சட்டமன்ற தொகுதி இலவச சட்ட ஆலோசக உதவியை பொது மக்களுக்கு வழங்கவுள்ளது. இந்த நிகழ்வு ஒவ்வொரு மாதத்தின் மூன்றாவது வியாழக்கிழமை மாலை 6.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை நடைபெறும்.

பொது மக்கள் சட்ட விவகாரம் தொடர்பான விளக்கங்களைப் பெறுவதற்கு ஏதுவாக கோத்தா கெமுனிங் தொகுதி சேவை மையம் இந்த ஏற்பாட்டை செய்துள்ளதாக  சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பிரகாஷ் கூறினார்.

சட்ட விவகாரங்களால் உங்களுக்கு சுமை ஏற்பட அனுமதிக்காதீர்கள். கோத்தா கெமுனிங் தொகுதி சேவை மையத்திற்கு வந்து வழக்கறிஞரிடம் உரிய ஆலோசனைகளைப் பெறுங்கள். இந்தப் பதிவை பகிர்வதோடு சட்ட உதவி தேவைப்படுவோரிடமும் தெரியப்படுத்துங்கள் என அவர் தனது பேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

சிலாங்கூர் அரசு கடந்த 2022ஆம் ஆண்டு 10 லட்சம் வெள்ளி நிதி ஒதுக்கீட்டில் சட்ட உதவி நிதியை தொடக்கியது. இத்தகைய சட்ட உதவி நிதித் திட்டத்தை தொடக்கிய முதல் மாநிலமாக சிலாங்கூர் விளங்குகிறது.

இந்த உதவித்  திட்டத்தை குடும்ப மற்றும்  பணியிட விவகாரங்களை உள்ளடக்கிய ஷரியா வழக்குகளுக்கும் விரிவுபடுத்த இவ்வாண்டு வரவு செலவுத் திட்டத்தில் மாநில அரசு நடவடிக்கை எடுத்துள்ளது


Pengarang :