ECONOMYMEDIA STATEMENTNATIONAL

நிதி சேகரிப்பு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் – பிரதமர்

கோலாலம்பூர், 18 பிப் : இந்த நாட்டில்  திரட்டும் எந்தவொரு நிதியையும் நிர்வகிப்பதில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் வலியுறுத்தினார்.

நிதி அமைச்சராகவும் இருக்கும் அன்வார், எந்தவொரு அமைப்பிலும் சேகரிக்கப்படும் ஒவ்வொரு நன்கொடையும். இலக்கிடப்பட்ட குழுக்களுக்கு சென்று சேர்வது உறுதி செய்ய விதிகளைப் பின்பற்ற வேண்டும் என்று கூறினார்.

பொறுப்பற்ற தரப்பினரால் தவறாகப் பயன்படுத்த படுவதைத் தடுக்க, முறையான  நிதி நிர்வாக முக்கியத்துவத்திற்கு மடாணி அரசு எப்போதும் முன்னுரிமை அளித்து வருகிறது என்றார்.

“அதனால்தான் இந்த நன்கொடைகள் அனைத்தும் முறையான சேனல்களைப் பின்பற்ற வேண்டும் என்று நாங்கள் பரிந்துரைக்கிறோம், மேலும் தொகையை ஆராயவும், என்ன வாங்கப்பட்டது, எவ்வளவு ஒப்படைக்கப்பட்டது,போன்றவற்றில் வெளிப்படைத் தன்மை இருக்க வேண்டும் என்று கூறினார்.

இங்கு அவர் பெர்னாமா மற்றும் RTM உடன் ஒரு உரையாடல் அமர்வில் கலந்து கொண்ட பிறகு  நேற்று தெரிவித்தார்.

“அதனால்தான், பொறுப்புக்கு வரும்போது, நாம் கவனமாக இருக்க வேண்டும், ஏனென்றால் நாங்கள் நன்கொடை வசூலிக்கிறோம், (உதாரணமாக) மஹாத் தஹ்ஃபிஸ் அல்லது பள்ளிகளுக்கு, அதில் விதிகளை கடைபிடிக்க வேண்டும், இல்லையெனில், ஒருவர்  நிதி சேகரித்து பின்னர் அவர் தன் வீட்டை சரி செய்கிறாரா அல்லது பொது தேவைகளுக்கு பயன் படுத்துகிறாரா என்பதை  அறிய முடியாமல் போகலாம், அதனால்தான் நாங்கள் எந்த  விஷயத்திலும்  விதிகளை பின்பற்ற வேண்டும்,” என வலியுறுத்தினர்.

நேற்று தொடங்கிய இரண்டு நாள் நிகழ்ச்சியில் தகவல் தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் மற்றும் தகவல் தொடர்பு அமைச்சகத்தின் பொதுச் செயலாளர் டத்தோ முகமட் ஃபௌசி எம்டி இசா ஆகியோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக, பல்வேறு தற்போதைய தலைப்புகள் மற்றும் சிக்கல்களை உள்ளடக்கிய பத்திரிகை செயலாளர்கள் முதல் அமைச்சர்கள் மற்றும் கார்ப்பரேட் கம்யூனிகேஷன்ஸ் பணியாளர்கள் வரை பங்கேற்பாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு அன்வார் பதிலளித்தார்.


Pengarang :