ANTARABANGSA

காஸாவில் பலியான சிறார்கள், பெண்களின் எண்ணிக்கை ரஷியா-உக்ரேன் போர் மரணங்களை விட ஆறு மடங்கு அதிகம்

அங்காரா, பிப் 25- காஸாவில் கடந்தாண்டு அக்டோபர் மாதம் 7ஆம் தேதி முதல் உயிரிழந்த சிறார்கள் மற்றும் பெண்களின் எண்ணிக்கை ரஷியா-உக்ரேன் போரில் உயிரிழந்தவர்களைக் காட்டிலும் ஆறு மடங்கு அதிகமாகும்.

கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி முதல் நிகழ்ந்து வரும் ரஷியா-உக்ரேன் போரில் உயிரிழந்த பொது மக்களின் எண்ணிக்கை மற்றும் காஸாவில் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் கோரத் தாக்குதல்களில் பலியான சிறார்கள் மற்றும் பெண்களின் எண்ணிக்கையை அனாடோலும்  செய்தி நிறுவனம் சேகரித்து வைத்துள்ளது.

சுமார் 23 லட்சம் மக்கள் வசிக்கும் பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் இடைவிடாத தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில இதுவரை 29.410 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் 12,660 சிறார்கள்  மற்றும் 8,570 பெண்களும் அடங்குவர்.

இந்த தாக்குதல்களில் இஸ்ரேல் இதுவரை 66,00 டன் வெடி பொருள்களைப்  பயன்படுத்தியுள்ளதாக வட்டாரம் ஒன்று கூறியது. காஸாவில் ஒரு சதுர கிலோ மீட்டர் பகுதியில் சராசரி 183 டன் வெடி மருந்து பயன்படுத்தப்பட்டுள்ளதை இது காட்டுகிறது.

இஸ்ரேலின் இந்த வெறித்தனமான தாக்குதலில் காஸா முழுமையாக சீர்குலைந்துள்ளதோடு 19 லட்சம் மக்கள் இருப்பிடங்களை இழந்துள்ளனர்.

அதே சமயம், கடந்த 2022ஆம் ஆண்டு முதல் நிகழ்ந்து வரும் ரஷியா-உக்ரேன் போரில் 570 சிறார்கள் மற்று 2,992 பெண்கள் உள்பட 10,378 பேர் உயிரிழந்த வேளையில் மேலும் 19,632 பேர் காயமடைந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கண்காணிப்பு குழு கூறியது.

 


Pengarang :